Search This Blog
Friday, September 27, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு சட்டமன்ற செயலக துப்புரவு பணியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த எம்.இ. மற்றும் எம்.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்பு பட்டதாரிகளிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. சட்டமன்றத்தில் 10 பெருக்குபவர், 4 துப்புரவுப் பணியாளர்கள் என்று மொத்தம் 14 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு கல்வித் தொகுதி குறிப்பிடாமல் உடல் வலிமையோடு இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு விண்ணப்பித்தவர்களில் 677 பேருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 3930 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. கல்வித் தகுதியே இல்லாத துப்புரவுப் பணியாளர் காலி பணியிடங்களுக்கு முதுகலை பொறியியல், தொழில்நுட்ப பட்டதாரிகள் விண்ணப்பித்து நேர்காணலில் பங்கேற்று வருகின்றன. கடந்த 23ம் தேதி முதல் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு 100 பேர் என்ற அடிப்படையில் 40 நாட்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. துப்புரவு பணியாளர்களாக பணியாற்ற முதுகலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகள் பங்கேற்று இருப்பது தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தின் கொடுமை அம்பலமாகி இருப்பது தெரியவந்துள்ளது.
சட்டசபை வளாகத்தில் துப்புரவு பணிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பொறியியல் பட்டதாரிகளும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் வந்திருந்தனர்.சட்டசபை செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவு பணியாளர் பணிக்கு பிப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன; 4607 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள்.மேலும் எம்.டெக். - எம்.சி.ஏ. - எம்.காம். என பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பித்தனர். வந்த விண்ணப்பங்களில் 677 நிராகரிக்கப்பட்டன; 3930 ஏற்கப்பட்டன.தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி சட்டசபை வளாகத்தில் இரு நாட்களாக நடந்து வருகிறது. தினமும் 100 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் இளம்பெண்களும் உண்டு.சபாநாயகர் தனபால் சட்டசபை செயலர் சீனிவாசன் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளதால் துணை செயலர்கள் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.பட்டதாரி இளைஞர் ஒருவர் கூறியதாவது:இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றால் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகின்றனர். அதுவும் நிரந்தரம் இல்லை. ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய வேண்டி உள்ளது.துப்புரவு பணி என்றாலும் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வரும்; பணியும் நிரந்தரம். இப்பணி கிடைத்தால் இதிலிருந்தபடியே வேறு பணிக்கு செல்லலாம் என்பதால் விண்ணப்பித்தேன். சான்றிதழ்களை சரிபார்த்த அதிகாரிகள் 'தேர்வு செய்யப்பட்டால் கடிதம் வரும்' என தெரிவித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
வேலையில்லா திண்டாட்டத்தின் கொடுமை அம்பலம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.