முதுநிலை ஆசிரியா் பணிக்கான ஆன்லைன் தோ்வுகள்: 154 மையங்களில் இன்று தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 27, 2019

Comments:0

முதுநிலை ஆசிரியா் பணிக்கான ஆன்லைன் தோ்வுகள்: 154 மையங்களில் இன்று தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வுகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகின்றன. முறைகேடுகளை தவிா்க்க தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 1 லட்சத்து 22 ஆயிரத்து 80 பெண்கள், 8 திருநங்கைகள் உட்பட மொத்தம் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 463 பட்டதாரிகள் எழுத உள்ளனா். மொத்தம் 17 பாடங்களுக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் தோ்வுகள் நடைபெற உள்ளன. மேலும், முதுநிலை ஆசிரியா் தோ்வு முதல்முறையாக கணினி வழியில் நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 154 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு தோ்வுக்கு தேவையான முன்னேற்பாடுகளை ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தோ்வில் முறைகேடுகளை தவிா்க்க அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தோ்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிட்ட நேரத்துக்குள் தோ்வு அறைக்கு வந்துவிட வேண்டும். பெருவிரல் கைரேகை வைத்த பிறகு தான் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவா். இதேபோல், பெண்கள் ‘ஹை ஹீல்ஸ்’ செருப்பு அணியவும், ஆண்கள் முழுக்கை சட்டை அணியவும், செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுவரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை தோ்வா்கள் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என ஆசிரியா் தோ்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். அரசு பள்ளிகளில் 2144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு இன்று துவங்குகிறது; மூன்று நாட்கள் நடக்கிறது.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. வழியாக தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் 154 மையங்களில் கணினி வழியில் இந்த தேர்வு நடக்கிறது. இதில் 1.22 லட்சம் பெண்கள் உட்பட 1.85 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளை தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 150 கேள்விகளுக்கு மூன்று மணி நேரம் தேர்வு நடக்கும். காலை 7:30 மணிக்குள்ளும் பிற்பகல் தேர்வுக்கு பகல் 12:30 மணிக்குள்ளும் தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. PG TRB வழிமுறைகள்" 1. தேர்வுகூடத்திற்கு தேர்வுகூட அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ள Reporting Time க்கு முன்னர் சென்றுவிடவும். 2. தவறாமல் தேர்வுகூட அனுமதி சீட்டினை எடுத்து செல்லவேண்டும். 3. தேர்வுகூட அனுமதி சீட்டில், விண்ணப்பத்தில் ஒட்டியே அதே போட்டோ ஒன்று ஒட்ட வேண்டும். 4. தேர்வுகூட அனுமதி சீட்டுடன் ஆடையாள அட்டை ஒரிஜினல் ஒன்றும் (விண்ணப்பத்தில் குறிப்பிட்ட அடையாள அட்டை அல்லது வேறு ஏதாகிலும் ஒன்று) எடுத்துச் செல்லவேண்டும். 5. தேர்வுகூட அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டை தவிர வேறு எந்த பொருளும் எடுத்துச் செல்லக்கூடாது. குறிப்பாக மொபைல் போன், பெல்ட், ஆபரணங்கள், ஹீல்ஸ் செப்பல் ஆகியவற்றிற்கு அனுமதி கிடையாது. 6. Rough work செய்வதற்கு தேர்வு கூடத்தில் பென், பென்சில், பேப்பர் ஆகியவை தரப்படும். தேர்வு முடிந்தவுடன் திரும்ப கொடுத்துவிட வேண்டும். 7. தேர்வுகூட அனுமதி சீட்டினை தேர்வு கூடத்திலேயே வாங்கி வைத்துக் கொள்வதால், அதனை முன்கூட்டியே நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வினாத்தாள் பற்றி: 1. 150 கேள்விகள் - 180 நிமிடங்களில் இருக்கும் 2. ஒரே நேரத்தில் ஒரு கேள்வி மட்டுமே கணினித் திரையில் காண்பிக்கப்படும் 3. ஒவ்வொரு கேள்விக்கும் 4 மாற்றுகள் இருக்கும் 4. கேள்வி ஆங்கில மொழியில் மட்டுமே கிடைக்கும் 5. தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு முன் இன்விஜிலேட்டரிடம் தங்கள் சந்தேகங்கள் அல்லது கேள்விகளைக் கேட்கலாம். தேர்வு தொடங்கிய பின்னர் எந்த கேள்விகளும் கேட்க முடியாது.
கேள்விகளுக்கு பதிலளிப்பது பற்றி: 1. உங்கள் ஸ்கிரீனில் இடது புறம் அனைத்து கேள்விகளுக்கான எண்களும் வெள்ளை நிறத்தில் காண்பிக்கும். 2. முதல் ஸ்கிரீனில் ஒரே ஒரு கேள்வியும் அதற்கான option பதில்களும் இருக்கும். 3. ஒரு கேள்விக்கு பதிலளிக்க, சரியான விடைக்கு முன் உள்ள புல்லட் பட்டனை கிளிக் செய்யவேண்டும். அவ்வாறு கிளிக் செய்யும்போது அந்த கேள்விக்கான எண் பச்சை நிறமாக மாறும். 4. அடுத்த கேள்விக்கு மாற next பட்டனை கிளிக் செய்யவும். அவ்வாறு செய்யும் போது அடுத்த கேள்வியும் அதற்கான option பதில்களும் திறையில் தெரியும். 5. இவ்வாறு NEXT பட்டனை கிளிக் செய்தால் ஒவ்வொரு கேள்வியாக வரும். 6. முந்தைய கேள்விக்கு செல்ல previous பட்டனை கிளிக் செய்யலாம். 7. குறிப்பிட்ட கேள்விக்கு உடனடியாக செல்ல, ஸ்கிரீனில் இடது புறம் உள்ள கேள்வி எண்களில் கிளிக் செய்வதன் மூலம் துரிதமாக அந்த கேள்விக்கு செல்லலாம். பலமுறை NEXT பட்டனை கிளிக் செய்து செல்வதால் ஏற்பாடுத் தாமதத்தை தவிர்க்கலாம்.
8. ஏதேனும் ஒரு கேள்விக்கு ஒரு பதில் அளித்தபின் அதனை மாற்ற விருப்பினால், விரும்பும் பதிலுக்கு எதிரே உள்ள புல்லட் பட்டனை கிளிக் செய்யலாம். அல்லது எந்த பதிலும் தற்போது தர வேண்டாம் என நினைத்தால் Clear response பட்டனை கிளிக் செய்யலாம். 9. பதில் அளித்த கேள்விகளை மறு ஆய்வு செய்ய நினைத்தால், ஸ்கிரீனின் வலது மேல் புறத்தில் உள்ள Bookmark this question பட்டனை கிளிக் செய்யவும். அப்பொழுது அந்த கேள்வி நீல நிறத்தில் மாறும். 10. பதில் அளிக்காத கேள்வி வெண்மை நிறத்திலும், பதில் அளித்த கேள்வி பச்சை நிறத்திலும், பதில் அளித்து Bookmark செய்த கேள்வி நீல நிறத்திலும், பதில் அளிக்காமல் Bookmark செய்த கேள்வி சிகப்பு நிறத்திலும் இருக்கும். 11. அனைத்து கேள்விகளுக்கும பதில் அளித்தவுடன் done பட்டனை கிளிக் செய்யவும். 12. அப்பொழுது மொத்த கேள்விகள், பதில் அளித்த கேள்விகள், பதில் அளிக்காத கேள்விகள் எத்தனை என்ற விவரம் வரும் 13. பச்சை நிறம், ஊதா நிறம் உள்ள கேள்விள் பதில் அளித்த கேள்வியாக கருதப்படும். வெண்மை, சிகப்பு நிறம் உள்ள கேள்விகள் பதில் அளிக்காத கேள்விகளாக கருதப்படும். 14. மீண்டும் பதில் அளிக்கவோ, பதிலை மாற்றவோ விரும்பினால், Go to Test பட்டனை கிளிக் செய்யவும். 15. தேர்வினை முடித்துக்கொள்ள Finish பட்டனை கிளிக் செய்யவும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 போட்டித் தேர்வுக்கான தேர்வு மையங்கள் வெகு தொலைவில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் அதிருப்தியுடன் தெரிவித்தனர். 2,144 பணியிடங்களை நிரப்புவதற்கான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், இணைய வாயிலாக விண்ணப்பதாரர்கள் எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான அறிவுரைகள் என்ற பகுதியில், தேர்வெழுத 3 விருப்பமான மையங்களைத் தேர்வர்கள் தேர்வு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இணையத்தில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து பார்த்தபோது, வெகு தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக திண்டுக்கல் லைச் சேர்ந்த சசிக்குமார் கூறியபோது, ‘‘விருப்பத் தேர்வு மையமாக திண்டுக்கல், மதுரை, திருச்சி ஆகிய 3 மாவட்டங்களை நான் தேர்வு செய்திருந்தேன். ஆனால், எனக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், நான் தேர்வுக்கு முந்தைய நாள் இரவே அங்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் செலவாகும். இதேபோல தூத்துக்குடி, தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த என் நண்பர்கள் சிலருக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் கூறியபோது, “விருப்பத் தேர்வு மையமாக புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 3 மாவட்டங்களைக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், எனக்கு கரூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, புதுக்கோட்டையைச் சேர்ந்த சிலருக்கு கோவை மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. வறிய நிலையில் உள்ள என்னைப் போன்றவர்களுக்கு வெகு தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது’’ என்றார்.
தேர்வு மையங்கள் மாற்றம்: இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா, சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘முதலில் விண்ணப் பித்தவர்களுக்கு முன்னு ரிமை என்ற அடிப்படையில் தேர்வர் களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. எனவே, கடைசியாக விண்ணப்பித்த சிலருக்கு தேர்வு மையங்கள் வேறு மாவட்டங்களில் ஒதுக்கப் பட்டுள்ளன. அவர்களில்கூட கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நியாயமான காரணம் கூறியவர்களுக்கு அவர்கள் கேட்கும் தேர்வு மையங்களை மாற்றிக் கொடுத்துள்ளோம். அடுத்தாண்டு முதல் தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இதுபோன்ற சிக்கல்கள் எழாமல் பார்த்துக் கொள்ளப்படும்’’ என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews