👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஒரு தீக்குச்சீயை வைத்து ஒரு வீட்டிற்கு வெளிச்சத்தையும் தர முடியும், அதை வைத்து அந்த வீட்டையும் எரிக்க முடியும் என்பதற்கு ஏற்பதான் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியும், மனிதனின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும், விரைந்து செயலாற்ற உதவுவதாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வடிவமைக்கப்படுகிறது.
ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இது நாளுக்கு நாள் பல மோசடிகளுக்கு வழிவகுக்கிறது. அப்படி ஒரு விஷயம் தான் நாம் இன்று பார்க்கப் போகும் கட்டுரை.
பேடிஎம் என்னும் டிஜிட்டல் பேமென்ட் சிஸ்டம் மக்களுக்கு பல நல்லவற்றை தந்தாலும், இது போன்ற சில கெட்ட விஷயங்களுக்கு இருக்கத்தான் செய்கின்றன. அதிலும் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் இப்படி செய்தால், ஆன்லைன் மோசடியாளர்கள் எளிதில் இன்னும் எளிதாக மக்களை ஏமாற்றிவிட முடியுமே.
பேடிஎம் மூலம் திருட்டு
உத்திரபிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன், தனது தந்தைக்கு தெரியாமல் பேடிஎம் டிஜிட்டல் வாலட் மூலம் 35,000 ரூபாயை, ஒரு வருடத்தில் திருடியுள்ளான். அதுவும் சிறிது சிறிதாக ஆயிரமாயிராமாய் திருடியுள்ளான். இதில் வேடிக்கை என்னவெனில் அந்த சிறுவனின் தந்தை யாரோ ஒருவர், தனது வங்கிக் கணக்கிலிருந்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை செய்துள்ளனர் என்றும், சைபர் க்ரைமை நாடியுள்ளார்.
எதற்காக இந்த திருட்டு
ஆன்லைனில் கேம்கள் மீது தீராத ஆர்வத்தினால், அதை விளையாடுவதற்காக, அதிலும் கட்டணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளுக்கு பணம் செலுத்துவதற்காக இவ்வாறு பணம் திருடப்பட்டாதாகவும் கூறப்படுகிறது. இந்த சிறுவன் ஆன்லைன் வீடியோ கேம்களுக்கு மிக அடிமை என்பதும், இந்த கேம்களை விளையாடுவதற்காக, தந்தையிம், பேடிஎம் அக்கவுண்டிலிருந்து இந்த தொகையினை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இங்கு ஒரு தனது வங்கிக் கணக்கில் பணம் குறைந்து கொண்டிருக்கவே, மறுபுறம் இது எதுவும் தெரியாத அந்த அப்பாவி தந்தை சைபர் க்ரைமை நாடியுள்ளார்.
வீட்டிலேயே திருடன்
சைபர் க்ரைமை நாடிய பின்பு தான் விஷயம் வெட்ட வெளிசத்திற்கு வந்துள்ளது. அப்போது தான் அந்த தந்தைக்குக்கும் விஷயம் புரிந்துள்ளது. ஏனெனில் திருடப்பட்டதாகக் கூறப்படும் பணம் முழுவதும், தனது மொபைல் எண் மூலமாக பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் தான் தெரிய வந்துள்ளது திருடன் வேறு எங்கும் இல்லை. நம் வீட்டில் தான் இருக்கிறான் என்றும் தெரிந்து கொண்டுள்ளார் அந்த தந்தை.
எப்படி பணத்தை எடுத்தார்
ஆரம்பத்தில் அந்த சிறுவன் மேல் எதுவும் சந்தேகம் வராத நிலையில், இவர் வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்டதாகக் கூறும் அனைத்து பணமும், ஆன்லைன் கேம்களுக்காக செலுத்தப்பட்டதாகக் கூறிய பின்பு தான் தெரியவந்துள்ளது. இது அச்சிறுவனின் வேலை என்று. தனது தந்தையின் மொபைலில், பேடிஎம் வாலட் அக்கவுண்ட் ஒன்றை ஆரம்பித்துள்ளான் அச்சிறுவன். அதன் மூலம் தனது தந்தையின் அக்கவுண்டிலிருந்து சிறுக சிறுக பணத்தையும் பேடிஎம் வாலட்டுக்கு மாற்றியுள்ளான். நாளுக்கு பணம் இழப்பு அதிகரிக்கவே பிரச்சனை தெரிய வந்துள்ளது. அதிலும் கடந்த டிசம்பர் 2018லியே அவரின் வங்கிக் கணக்கு பேடிஎம் வாலட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பெட்றோருக்கு ஆலோசனை
குழந்தை ஆரம்பத்தில் செய்த தவறை ஒப்புக் கொள்ள மறுத்தாலும், பின்னர் விசாரணைக்கு பின்பு ஒப்புக் கொண்டாலும், தனது தந்தை அடிப்பார், மிரட்டுவார் என எண்ணி பயந்ததாகவும் கூறியுள்ள சைபர் க்ரைம் போலீசார் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி நீண்ட நேரத்திற்கு பின்பு வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இப்படி இன்று நம் வீட்டிலும் பல குழந்தைகள் இருக்கலாம். பண விஷயத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதோடு, அவர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம். .
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U