👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள 300க்கும் மேற்பட்ட இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த இயலாது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் விளக்கமளித்துள்ளது. பழைய வழக்கு ஒன்றின் காரணமாக உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளதால் ஜூலை 31ம் தேதிக்கு பிறகு கலந்தாய்வு நடத்த இயலாது என தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும், கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி கல்லூரி என 4 முக்கிய கல்லூரிகள் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் சுமார் 3000 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி ஆரம்பித்து 30ம் தேதி வரை நடைபெற்றது.
கலந்தாய்வு முடிந்த பிறகு 300- க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து காலியாக உள்ள இந்த இடங்களுக்கு மீண்டும் சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுமா? என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால், சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படாது என அகில இந்திய தொழிலநுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுதவிர, தமிழகம் முழுவதும் உள்ள 400 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 1 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. இருப்பினும், கிண்டி கேம்பசில் காலியாக உள்ள இடங்களுக்கு அதிக மதிப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
ஏனெனில் இந்த கல்லூரி அண்ணா பல்கலையின் முக்கிய வளாக கல்லூரியாக பார்க்கப்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு குறைந்த கட்டணம் மற்றும் வேலைவாய்ப்புகளே காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த 300 இடங்கள் வீணாக்கப்படாமல் கிராமப்புற ஏழை மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்றவர்கள் என யாருக்கேனும் பயன்பட வேண்டும் என்று கல்வியாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த பழைய தீர்ப்பின்படி ஜூலை 31க்கு பிறகு சிறப்பு கலந்தாய்வு நடத்துவது சாத்தியமில்லை என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U