சென்னையில் வீணை வாசித்து நிதி திரட்டும் அமெரிக்க பள்ளி மாணவி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 10, 2019

சென்னையில் வீணை வாசித்து நிதி திரட்டும் அமெரிக்க பள்ளி மாணவி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அமெரிக்கவாழ் இந்திய மாணவி ஒருவர் வீணை சென்னையில் வீணை வாசித்து ஆட்டிசம் உள்ளிட்ட நோய்களால் மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு நிதி திரட்ட இருக்கிறார். நிகழ்ச்சி ஆகஸ்ட் 10ஆம் தேதி இன்று நடக்கிறது. அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் உள்ள ஜே.பி. ஸ்டீவன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் கிரேடு 11 படிக்கும் மாணவி சஹானா ரங்கநாதன். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் சமூக மாற்றத்திற்கு பங்களிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதே நோக்கில் ஆகஸ்ட் 10ஆம் தேதி சென்னையில் வீணை மற்றும் வாய்ப்பாட்டு கச்சேரியை அரங்கேற்ற உள்ளார். ரசா (RASA) எனப்படும் அமைப்புக்காக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.
சஹானாவின் சகோதரரும் ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளனவர் என்பதால் ஆட்டிசம் உள்ளிட்ட நோய்களால் மாற்றுத்திறன் படைத்தவர்கள் மீது அக்கறையுடன் உதவிகள் செய்துவருகிறார். அமெரிக்காவில் குழந்தைள் மற்றும் மாற்றுத்திறனாளிகளக்கு உதவி செய்கிறார். தனது வலைப்பூவில் மாற்றித்திறனாளிகள் மீது பரிவுடன் இருக்க வேண்டியது பற்றியும் அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள் பற்றியும் எழுதியுள்ளார் நியூ ஜெர்சியில் உள்ள கலா உபாசனா மியூசிக் அகாடெமியில் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கற்பித்து வருகிறார். 2017ஆம் ஆண்டில் நியூ ஜெர்சி டைட்டன் நீர்வீழ்ச்சியில் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்தி ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளானோருக்காக நிதி திரட்டினார்.
பள்ளியில் சாரணியர் இயக்கத்திலும் இணைந்து செயல்படுகிறார். இவரது சேவைகளைப் பாராட்டி அந்நாட்டு சாரணியர் இயக்கம் சார்பில் சில்வர அவார்டு என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது. சென்னையில் உள்ள ரசா அமைப்பு 30 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. இசை, நடனம், நாடகம், கதை சொல்லல், ஓவியம் மற்றும் கைவினைக்கலை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது. இதன் மூலம் திரட்டும் நிதியை குழந்தைகளின் நலனுக்காக அளித்து உதவுகிறது. உடல்குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லாமல் பயற்சி அளித்துக்கொண்டிருக்கிறது. மாணவி சஹானா ரங்கநாதனின் வீணை மற்றும் பாட்டுக் கச்சேரி வரும் சனிக்கிழமை நடைபெறும். நிகழ்ச்சிக்கு அனுமதிக் கட்டணம் ஏதும் இல்லை. அனைவரும் இந்த இசை நிகழ்ச்சிக்கு வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews