👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups

ராஜஸ்தானில் திருமணத்துக்கு மறுத்ததால் வீட்டை விட்டு துரத் தப்பட்ட இளம்பெண்,மனம் தொய் வடையாமல் படிப்பு, மாடலிங்கில் சாதனை படைத்துள்ளார். அவருடைய கதையை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, வீடியோவாக வெளியிட அது வைரலாகி உள்ளது.
மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கடந்த சனிக் கிழமை மும்பையில் நடந்த ‘லேக்மி பேஷன் வாரம் 2019’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, ஜவுளித் துறையின், ‘நிலையான தீர்மானம்’ திட்டத்தை அறிமுகம் செய்தார்.
அப்போது நிகழ்ச்சியில் பங் கேற்ற நிஷா யாதவ் என்ற இளம் பெண்ணின் சாதனைக்குப் பின்னால் இருந்த கண்ணீர் கதையைக் கேட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆச்சரி யம் அடைந்தார். நிஷாவிடம் ஆறுதலாகப் பேசிய ஸ்மிருதி, அதை வீடியோவாக எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அது சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், ‘‘லேக்மி பேஷன் வாரம் நிகழ்ச்சியில் பங் கேற்கும் மாடலிங் அழகிகள் பலருக் குப் பின்னாலும் ஒரு கதை இருக் கிறது. மாடலிங்கில் நீங்கள் அழகைப் பார்க்கலாம், பெருமை யைப் பார்க்கலாம். அதேவேளை யில் பேஷன் ஷோவில் பங்கேற் கும் ஒவ்வொருவரும் தங்களுடைய கண்ணீரை மறைத்துவிடுகின்ற னர்’’ என்று கூறியிருந்தார்.
நிஷா யாதவின் பின்னணி குறித்து ஸ்மிருதி இரானி வீடியோ வில் கூறியிருப்பதாவது:
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் நிஷா யாதவ். இவர் மாடலிங் அழகி மட்டுமல்ல. தற்போது ராஜஸ்தான் சட்டப் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். டெல்லியில் சட்டப் பயிற்சியும் பெற்று வருகிறார். லேக்மி பேஷன் ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். இதற்குப் பின்னால் அவருடைய கடின உழைப்பு இருக்கிறது.
பள்ளிக்கு தினமும் தனது வீட்டில் இருந்து 6 கி.மீ. தூரம் நடந்து சென்றுள்ளார். இளம் வயதிலேயே நிஷாவை திருமணம் செய்து கொள்ள அவருடைய தந்தை வற்புறுத்தி உள்ளார். அதற்கு நிஷா உடன்படவில்லை. அதனால் அவரை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறியிருக்கிறார். நிஷாவுக்கு ஆதரவாக இருந்த 4 சகோதரிகளையும் வீட்டை விட்டு வெளியேறும்படி கூறியிருக்கிறார் அந்தத் தந்தை.
உங்கள் மகள்கள் படிப்பை முடித்ததும் அவர்களுக்கு திருமணம் செய்து வையுங்கள். ஆண்களாக இருந்தால், அவர்கள் விரும்பும் போது திருமணம் செய்து வையுங்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து நிஷா கூறும்போது, ‘‘என்னுடைய நான்கு சகோதரி களும் வாழ்க்கையில் வெற்றி அடைந்துவிட்டனர். ஒருவர் ஐஏஎஸ் அதிகாரி, ஒருவர் போலீஸ் அதிகாரி, ஒருவர் சாப்ட்வேர் இன்ஜினீயர், ஒருவர் கல்லூரி பேராசிரியராக இருக்கிறார். தற்போது நிலைமை நன்றாக உள்ளது. தந்தை எங்களை ஏற்றுக் கொண்டார். எங்கள் தந்தையை நாங்கள் மிகவும் நேசிக் கிறோம். அவர் அளித்த சுதந்திரத் தால்தான் எங்களால் இந்த அளவுக்கு சாதிக்க முடிந்தது’’ என்று உணர்ச்சி வசப்பட்டு கூறுகிறார் நிஷா.
குவியும் பாராட்டு:
இந்த வீடியோவை 800-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். வீடியோவால் தற்போது நிஷாவுக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதற்காக அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, நிஷா யாதவ் நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U