👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
2018 - 19 நிதி ஆண்டில் சம்பாதித்த பணத்துக்கு, வருமான வரி செலுத்த சில பிரிவினர்களுக்கும், குறிப்பாக தனி நபர்களுக்கு ஆகஸ்ட் 31, 2019 தான் கடைசி தேதியாக இருக்கிறது.
ஆனால் இப்போது சில பல காரணங்களால், தனி நபர்கள் போன்ற சில பிரிவினர்கள் வருமான வரிப் படிவங்களை முறையாக தாக்கல் செய்ய செப்டம்பர் 30, 2019 வரை காலக் கெடுவை நீட்டித்து இருப்பதாக சில செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
இந்த தகவளை மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேரடி வரிகள் வாரியமே தன் ட்விட்டர் கணக்கில் அதிகாரபூர்வமாக தெரியப்படுத்தி இருப்பது போலவும் சில ட்விட்கள் இருக்கின்றன. ஆனால் அவைகள் எல்லாம் போலி என நேரடி வரிகள் வாரியம் பத்திரிகைளிடமும், தன் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு வழியாகவும் சொல்லி இருக்கிறது.
ஒத்தி வைப்பு
முதலில் 2018 - 19 நிதி ஆண்டுக்கான வருமான வரிப் படிவங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க ஜூலை 31, 2019 கடைசி தேதியாக சொல்லி இருந்தார்கள். ஃபார்ம் 16 போன்ற ஆவணங்களை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தாமதமாகவே கொடுக்க முடிந்தது. இது போன்ற காரணங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு கடந்த ஜூலை 2019 இறுதி நாட்களில் ஆகஸ்ட் 31, 2019 வரை நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.
யார் எல்லாம் செலுத்த வேண்டும்
1. 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள், டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டவர்கள்
2. வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள்
3. க்ரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள்
4. க்ளப்களில் ஆண்டுக்கு 25,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தி உறுப்பினராக இருப்பவர்கள்.
5. சுமாராக 1,000 சதுர அடிக்கு மேல் சொந்த வீட்டிலோ, வாடகை வீட்டிலோ குடி இருப்பவர்கள்
6. 150 சதுர அடி வணிக இடத்தை சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ பயன்படுத்துபவர்கள்
7. கார் வைத்திருப்பவர்கள்... இவர்கள் எல்லாம் கட்டாயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
அது போக பான் அட்டை, ஆதார் அட்டை, ஃபார்ம் 16, ஃபார்ம் 26 AS, சொத்து விவரங்கள், வங்கிக் கணக்கு ஸ்டேட்மெண்ட்கள் அவசியம் தேவையாக இருக்கும். இது எதுவுமே சரிப்பட வில்லையா, நேரடியாக ஒரு ஆடிட்டரைச் சென்று பாருங்கள்.
சரி பாருங்கள்
வருமான வரிப் படிவத்தை நிரப்பும் போது ஒன்றுக்கு இரண்டு முறை நீங்கள் கொடுக்கும் விவரங்களில் எழுத்துப் பிழை இல்லாமல், தவறில்லாமல் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு சின்ன எழுத்துப் பிழை கூட உங்களுக்கு வருமான வரித் துறையினரிடம் இருந்து நோட்டீஸ் வர வைக்கும் தவறாக அமையலாம். எனவே கவனம் தேவை..! முழுமையான வருமான வரிப் படிவத்தை நிரப்பிய பின் ஒரு முறை நிதானமாக படித்துப் பார்த்துவிட்டு சமர்பிக்கவும்.
ஜாக்கிரதை
சம்பளம் வழியாக வந்த பணத்தை சம்பளத்துக்கான இடத்திலும், பங்குகளை விற்றுக் கிடைத்த மூலதன ஆதாயங்களை, அதற்கான இடத்திலும் நிரப்ப வேண்டும். இப்படி வருமான வரித் துறையின் படிவத்தில் கேட்டிருக்கும் விவரங்களை சரியாகப் புரிந்து கொண்டு சரியான விவரங்களைக் கொடுக்க வேண்டும். தவறான இடத்தில் வருமானங்களைக் குறிப்பிட்டாலும் சிக்கலில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே உஷார் மக்களே.
கடைசி நேரத்தில் வேண்டாம்
நீங்கள் வருமான வரியை மிச்சம் பிடிக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் மார்ச் மாதத்திலேயே யோசித்து இருக்க வேண்டும். இப்போது வருமான வரிப் படிவத்தை நிரப்பப் போகும் போது, 80D, 80C என வரியை செலுத்தாமல் இருக்க வழி தேட வேண்டாம். ஒருவேளை ஆர்வத்தில் நீங்கள் அரசை ஏமாற்ற நினைத்து பொய்யான ஆவணங்களைச் சமர்பிப்பித்து சிக்கிக் கொண்டால் நாளை நோட்டீஸுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆள் ஆவீர்கள். எனவே என்ன வருமானம் வருகிறதோ அதற்கு ஒழுங்காக வரி செலுத்திவிடுங்கள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U