👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups

கல்வித் துறையில் 53 வகையான ஆவணங் களை பராமரிக்கவேண்டி இருப்பதால் பணிச்சுமையால் ஆசிரியர்கள் திணறுகின் றனர். இதனால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறை இயக்ககத்தின்கீழ் 27 ஆயிரத்து 895 ஆரம்பப் பள்ளிகள், 9 ஆயிரத்து 134 நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 28 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே பள்ளிகளில்
1.ஆசிரியர், ஆசிரியர் அல்லாதவர் பணிப் பதிவேடு,
2.சம்பளப் பதிவேடு, தற்செயல் விடுப்புப் பதிவேடு,
3.கற்றல் விளைவுகள் பதிவேடு,
4.பாடத்திட்டம்,
5.மெல்ல கற்போர் பதிவேடு,
6.கணிதக் கருவிப்பெட்டி பயன்பாட்டுப் பதிவேடு,
7. புத்தகப் பூங்கொத்து பயன்பாட்டுப் பதிவேடு,
8. வாசிப்புத்திறன் பதிவேடு,
9. எளிய அறிவியல் சோதனைப் பதிவேடு,
10. பள்ளி கட்டமைப்புப் பதிவேடு,
11.மாணவர்கள் சுய வருகைப் பதிவேடு,
12. காலநிலை அட்டவணை,
13. ஆரோக்கிய சக்கரம்,
14. எழுத்துப் பயிற்சி நோட்டு,
15.வரைபட நோட்டு,
16.கட்டுரை நோட்டு,
17. தொலைக்காட்சி ஒளிபரப்பு பதிவேடு, திட்டப் பதிவேடு,
18.அறிவியல் ரெக்கார்டு நோட்டு உட்பட 53 வகை ஆவணங்களை தலைமையாசிரியர் தயாரித்து பராமரிக்க வேண்டியுள்ளது. இதற்கு பெரும்பாலும் இடைநிலை ஆசிரியர்களே உதவுகின்றனர்.
இதுதவிர
1. கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (எமிஸ்) மாணவர்,
2.ஆசிரியர் விவரம், தேர்வு விவரம்,
3. நலத் திட்டங்கள்,
4. பொதுத் தேர்வு மையங்கள் விவரம் உட்பட பதிவேற்ற பணிகளாலும் பணிச்சுமை அதிகரிப்பதால் மாணவர்கள் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கல்விமுறையில் பாடத்திட்டம் மாற்றம் உட்பட சீர்திருத்தங்கள் செய்த பின்னர், ஆசிரியர்கள் கற்பித்தலைவிட 53 வகை யான ஆவணங்களை தயார்செய்து பரா மரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர்.
இதுதவிர
1.மக்கள் தொகை கணக் கெடுப்பு,
2.இலவசப் பொருட்கள் எடுத்து வருதல்,
3.எமிஸ் இணையதள பதிவேற்றம்,
4.சத்துணவு பராமரிப்பு,
5. பள்ளி விவரங்கள் மேம்பாடு,
6.விளையாட்டு போட்டிகள்,
7. விழாக் களுக்கு மாணவர்களை தயார்செய்வது,
8.கிராமசபை கூட்டங்களில் பங்கேற்றல்,
9.கல்வி உதவித்தொகை தேர்வுகளுக்கு தயார் செய் தல்,
10.க்யூ ஆர் கோடு பயன்பாடு
என இதரப் பணிகளையும் கவனித்து ஆவணங்களையும் பராமரிக்க வேண்டியுள்ளது.
இத்தனை பணிகளையும் முடிக்கவே நேரம் போதாமையால் திணறுகிறோம். இதில் 25 ஆவணங்களை மாணவர்கள் திறனுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தினமும் பதிவு செய்ய வேண்டும்.
```இன்றைக்கு ஆவணங்களை எப்படி முடிக்க வேண்டும் என்ற எண்ணமே மனதில் ஓடுவதால், கவனச் சிதறலில் மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்த முடியவில்லை.``` மாநிலத்தில் 70 சதவீத ஆரம்பப் பள்ளிகளில் ஈராசிரியர்களே உள்ளனர். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் 2 பேர்தான் 1 முதல் 5 வரையான வகுப்புகளையும் கவனிக்க வேண்டும். மொத்தமுள்ள 23 பாடங்களையும் நடத்த வேண்டும். இதில்ஆவணங்களையும் தயாரிப்பது பெரும் சவாலாக உள்ளதால் வாரத்தில் 2 நாட்கள் பாடம் நடத்துவதே பெரிய விஷயமாகிவிட்டது.
இதற்கிடையே கல்வி அதிகாரிகள் திடீர் சோதனை என்ற பெயரில் அவ்வப்போது வருவதால் அதற்கான முன்னேற்பாடுகளை யும் செய்ய வேண்டியுள்ளது. கற்பித்தல் பணியைவிட ஆவணங்களை தயாரித்து ஒப்படைக்கவே அதிகாரிகள் கெடுபிடி காட்டுகின்றனர். அவர்களுக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி அதிகரிப்பு என்ற புள்ளி விவரம் இருந்தால் போதும். இத்தகைய பணிச்சுமையால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில் தவிக்கின்றனர். கல்விமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்யும் அரசு ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை சிறப்பாக செய்ய வழிசெய்ய வேண்டும்.
பள்ளிக்கல்வித் துறை செயலராக உதயசந்திரன் இருந்தபோது ஆசிரியர்களை ஆவணங்கள் தயாரிப்பு பணியில் இருந்து முழுவதுமாக விடுவிக்க முயற்சிகள் எடுத்தார். அதேபோல், ஆசிரியர்களுக்கான ஆவணங்கள் பராமரிப்பு பணிகளை அரசு குறைக்க வேண்டும். கல்வி மாவட்டம் வாரியாக தகவல் மையம் அல்லது சிறப்பு தகவல் பிரிவு தொடங்கலாம். ஆவணங்களை தயார் செய்ய பள்ளிகள் வாரியாக தனி ஊழியர்களை நியமிக்கலாம். இல்லையெனில் இதர ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கி பணிகளை செய்ய உத்தரவிடலாம். அதற்கு மாறாக இந்நிலை தொடர்ந்தால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகும் அபாயமுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U