WhatsApp Trick: உங்க மெசேஜ யாரும் பார்க்கக் கூடாதா? அப்ப இத செய்யுங்க.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 21, 2019

WhatsApp Trick: உங்க மெசேஜ யாரும் பார்க்கக் கூடாதா? அப்ப இத செய்யுங்க..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வாட்ஸ்அப்பில் உங்களது சேட்டிங் மெசேஜை, மற்றவர்கள் யாரும் பார்க்க முடியாத வகையில் மறைப்பது எப்படி என்பது குறித்த விபரங்களை இங்கு காணலாம்.
சில நேரங்களில் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம். உங்கள் பாஸ்வேர்டும் அவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த சூழலில், உங்கள் வாட்ஸ்அப் சேட்டிங் மெசேஜை அவர்கள் பார்க்கக்கூடாது என்று நினைத்தால், அதற்கு ஒரு வழி இருக்கிறது.
இதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் மெசேஜை உங்களைத் தவிர யாரும் பார்க்க முடியாதபடி வைத்துக் கொள்ளலாம். இந்த வசதி ஐஒஎஸ் இயங்குதளத்தில் முன்னரே வந்து விட்டது. தற்போது ஆண்ட்ராய்டு பயனாளர்களும் இதே முறையை பின்பற்றலாம்.
ஆண்ட்ராய்டில் Archive Chat செய்யும் வழிமுறை:
1. வாட்ஸ்அப் ஓபன் செய்து கொள்ள வேண்டும்
2. Chat பகுதியில் குரூப் மெசேஜ், தனி நபர் மெசேஜ் இருக்கும்.
3. அவற்றில் யாருடைய மெசேஜை மறைக்க வேண்டுமோ, அதை நீண்ட நேரம் (Long Press) டச் செய்ய வேண்டும்.
4. இப்போது வரக்கூடிய சேட் ஆப்ஷனில் ‘Archive Chat’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
5. நீங்கள் மறைக்க விரும்பிய சேட் மெசேஜ் எல்லாம் இப்போது Archive List இல் சென்று விடும்.
சாதாரணமாக வாட்ஸ்அப் ஓபன் செய்தால் பார்க்க முடியாது. Chat Screen இல் Archived Chats என்ற ஆப்ஷனில் சென்றால் மட்டுமே இதை பார்க்க முடியும். அதை மீண்டும் லாங் பிரஸ் செய்து Unarchive செய்தால், பழையபடி மாறிவிடும். இந்த வசதியின் மூலம் குரூப் சேட், தனி நபர் சேட் என எந்த மெசேஜ் சேட்டிங் வேண்டுமானாலும் மறைத்துக் கொள்ள முடியும். Archive என்பது உங்களது மெசேஜை டெலிட் செய்து விடாது. அதே நேரத்தில் மெமரி கார்டிலும் சேமிக்காது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews