EMIS - தவறான தகவல்கள் பதிவேற்றம் - பள்ளி கல்வி முதன்மை செயலர் ஆய்வில் கண்டுபிடிப்பு - அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 21, 2019

EMIS - தவறான தகவல்கள் பதிவேற்றம் - பள்ளி கல்வி முதன்மை செயலர் ஆய்வில் கண்டுபிடிப்பு - அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வி தகவல் மேலாண்மை முறையில் தவறான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துவிதமான பள்ளிகள் விபரங்கள், மாணவர்களின் விவரம் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு பயன்படுத்துவதற்கு வசதியாக கல்வி தகவல் மேலாண்மை முறைமை (இஎம்ஐஎஸ்) என்ற திட்டம் கடந்த 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்காக தனி இணையதளம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் முன்னோடி திட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. சுமார் ஒன்றரை கோடி மாணவர்கள், ஐந்தரை லட்சம் ஆசிரியர்கள் விபரங்கள் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு இஎம்ஐஎஸ் எண் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் முறையாக தகவல்கள் பதிவு செய்யவில்லை, தவறான தகவல்கள் இடம்பெற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பள்ளி கல்வித்துறை முதன்மை செயலரால் சில பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டதில் கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமையில் (இஎம்ஐஎஸ்) மாணவர்கள் விபரங்கள் அப்டேட் செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் சேர்க்கை விபரமும், இஎம்ஐஎஸ்-ல் உள்ள மாணவர் சேர்க்கை விபரமும் வேறுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது அலுவலர்களின் கவனக்குறைவை சுட்டிக்காட்டவதாக உள்ளது என கூறியுள்ளார். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் தெரிவித்துள்ளார். எனவே அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்கள் விபரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் வரும் 24ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். மேலும் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையும், இஎம்ஐஎஸ்-ல் உள்ள மாணவர் சேர்க்கை எண்ணிக்கை விபரமும் வேறுபாடு இருக்க கூடாது. மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையும், இஎம்ஐஎஸ்-ல் உள்ள மாணவர்களின் சேர்க்கை விபரத்தை வகுப்பு வாரியாக இயக்குநர் இ-மெயிலுக்கு 25ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews