👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருக்கிறோம் என்பதற்காக ஆண்டுதோறும் சமர்ப்பிக்கும் வாழ்நாள் சான்றை இனி இணையதளம் மூலமே பெற்றுக் கொள்ளலாம்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அனைத்து ஓய்வூதியர்களும் தங்கள் வாழ்நாள் சான்றிதழ், மறுமணம் செய்யா சான்றிதழ் ஆகியவற்றை ஜீவன் பிரமாண இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் நடைமுறை 2017-ஆம் ஆண்டு முதல் வந்தது.
அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை ஜீவன் பிரமாண இணையதளத்தில் கைவிரல் ரேகை அல்லது கண் கருவிழியை பதிவு செய்ய வேண்டும்.
இதை ஓய்வூதியம் பெறும் வங்கிக் கிளைகள், வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள், தமிழ்நாடு இ சேவை மையங்கள், பொது சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யலாம்
இதற்காக ஓய்வூதிய எண், ஆதார் ஜெராக்ஸ், வங்கி கணக்கு எண், செல்போன் ண் ஆகியவற்றை ஓய்வூதியதாரர்கள் அளிக்க வேண்டும்.
இந்த சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால் ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் ஆண்டுதோறும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்க வங்கிக்கு செல்வர்.
இந்த நிலையில் அவர்கள் இனி வங்கிக்கு செல்லாமலேயே இணையதளம் மூலம் வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்க அரசு எளிமைப்படுத்தியுள்ளது.
அதன்படி
https:jeevanpramaan.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். அதில் ஜெனரேட் லைவ் சர்ட்டிபிகேட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அப்போது ஓய்வூதியதாரர் தனது ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும்.
அவ்வாறு கொடுத்தால் அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு OTP (ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொல்) அனுப்பப்படும். அந்த எண்ணை நிரப்பினால் அடுத்த சில வினாடிகளில் வாழ்நாள் சான்றிதழ் கிடைத்துவிடும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U