சி.சி.டி.என்.எஸ்(CCTNS). ஏன்? எதற்கு? எப்படி? பொதுமக்கள் அவசியம் அறிய வேண்டியவை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 21, 2019

சி.சி.டி.என்.எஸ்(CCTNS). ஏன்? எதற்கு? எப்படி? பொதுமக்கள் அவசியம் அறிய வேண்டியவை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஒருவரின் பின்புலம் குறித்து விசாரிப்பதற்காக தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்ட சி.சி.டி.என்.எஸ். வசதி குறித்தும், அதன் அவசியம் குறித்தும் தற்போது விரிவாக காணலாம். குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு அமைப்பு என்பதன் சுருக்கமே சி.சி.டி.என்.எஸ். தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்டு மாநில குற்ற ஆவணக் காப்பகம் மூலம் இந்த இணையதளமும், செயலியும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த சிசிடிஎன்.எஸ். இணையதளமும், செயலியும் உருவாக்கப்பட்டதன் நோக்கமே, குற்றம் நடக்கும் முன் காத்தல் என்ற அடிப்படையில் தான். டொமஸ்டிக் ஹெல்ப் எனப்படும் வீட்டு வேலை தொடர்பான ஆட்களை நியமிக்கும் முன், அவர்கள் குறித்த விவரங்களை சரிபார்க்கக் கோருதல், வேலை கொடுக்கும் நிறுவனம் ஒரு நபரைப் பற்றிய விவரம் கோருதல், வாடகை வீட்டிற்கு வரும் நபர்கள் குறித்த விவரங்களைக் கோருதல் மற்றும் தங்களை தாங்களே சுய சரிபார்ப்பு செய்து கொள்ளுதல் ஆகிய நான்கு விதமான சரிபார்ப்புகளை, சிசிடிஎன்.எஸ். இணையதளத்தில் விண்ணப்பித்து 15 நாட்களில் விவரங்களை எளிதில் பெற முடியும். சி.சி.டி.என்.எஸ். தளத்தில் இரு வகை உண்டு.
ஒன்று பொதுமக்கள் பார்க்கக் கூடியது. மற்றொன்று போலீஸ் மட்டுமே காணக் கூடியது. போலீஸ் மட்டும் காணக் கூடிய பக்கத்தில், குற்றவாளிகள் தொடர்பான அனைத்து விவரங்களும் இருக்கும். மற்ற பயனாளர்கள் சி.சி.டி.என்.எஸ். தளத்திற்குள் சென்று வலதுபுறமாக இருக்கும் போலீஸ் வெரிபிகேசன் சர்வீஸ் என்பதை கிளிக் செய்து அந்தப் பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு நியூ ரெக்வெஸ்ட் மூலம் செல்போன் எண்ணைப் பதிவு செய்து கொண்டு அடுத்தடுத்த நடைமுறைகளை நோக்கி நகரலாம். விவரங்கள் சரிபார்க்க வேண்டிய நபரின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளின் தகவல்களை பதிவு செய்து அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதில் சுய சரிபார்ப்புக்கு மட்டும் 500 ரூபாய் கட்டணம். மற்ற அனைத்து சேவைகளுக்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம். கடந்த ஜனவரி தொடங்கி தற்போது வரை, சி.சி.டி.என்.எஸ். மூலம் 33 ஆயிரத்து 39 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதில் சுய சரிபார்ப்புக்கு விண்ணப்பித்தோர் 18 ஆயிரம் பேர். அவர்களில் 17 ஆயிரத்து 300 பேருக்கு எட்டே நாட்களில் விவரங்கள் சேகரித்து கொடுக்கப்பட்டுள்ளன. வேலை தொடர்பான சரிபார்ப்புக்கு 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில், 14 ஆயிரத்து 600 பேருக்கு உரிய விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் வாடகைக்கு வீடு கொடுப்போரும், பணியாட்களை நியமிப்போரும் 39 விண்ணப்பங்களை மட்டுமே இது வரை அளித்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர் போலீசார். எளிதாக சேவை பெறும் வகையில் தளம் உருவாக்கப்பட்ட போதும், பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாதது கவலை அளிப்பதாக போலீசார் குறிப்பிடுகின்றனர்.
அமைந்தகரையில், 3 வயது சிறுமி, வீட்டுப் பணிப்பெண்ணால் கடத்தப்பட்ட சம்பவத்தில், தவறு நிகழ்ந்ததற்கு காரணமே அந்தப் பெண்ணின் பின்புலத்தைச் சரிபார்க்காமல் வேலைக்கு அமர்த்தியது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நன்கு படித்து முக்கிய பொறுப்பில் உள்ள நபர்களே, இதுபோல் அலட்சியமாக செயல்படுவதால் தான், குற்றச்சம்பவங்கள் நிகழ்வதாக கூறியுள்ள போலீசார், இனியாவது விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர். அதேவேளையில், சரிபார்ப்பு சேவையைப் பயன்படுத்தும் போது, ஒருவரின் முன் வரலாறு குறித்த தகவல்கள் மட்டுமே இருக்கும் என்று கூறியுள்ள போலீசார், பின் வரலாறை அறிந்து கொள்ள தாங்கள் ஒன்றும் சோதிடர்கள் அல்ல என்று தெரிவித்துள்ளனர். எனவே, பொதுமக்களும் கூடுதல் சுதாரிப்புடன் இருப்பது அவசியம் என்பது அவர்களின் கூடுதல் அறிவுரை. வேலைக்கு சேர்த்த பின்னர், அவரது நடத்தையின் போது சந்தேகம் எழும் பட்சத்தில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பதன் மூலம் வரும் முன் காக்கலாம் என்கின்றனர் காவல்துறையினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews