விமானப்படையில் ஏர்மேன் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 10, 2019

விமானப்படையில் ஏர்மேன் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி : குரூப் எக்ஸ் பணியிடங்களுக்கு கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்) பணியிடங்களுக்கு 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 அல்லது இன்டர்மீடியட் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல் பணியிடங்களுக்கு மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு பயிற்சியில் சேர விரும்புபவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2, இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 21 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் ரூ.250 ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில் www.airmenselection.cdac.in என்ற இணைதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய www.airmenselection.cdac.in அல்லது www.careerindianair force.cdac.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.09.2019 முதல் 24.09.2019 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews