👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தாமதமாவதற்கு விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் நிறைவடையாததே காரணம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஓரிரு நாள்களில் அப்பணிகள் நிறைவடைந்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும், வரும் 8 அல்லது 9-ஆம் தேதியில் கலந்தாய்வு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த ஜூன் 7-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி நிறைவடைந்தது.
அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 34,368 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,388 விண்ணப்பங்கள் என மொத்தம் 59,756 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், கடந்த 2-ஆம் தேதியே வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், தற்போது வரை பட்டியல் வெளியாகவில்லை.
அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இந்நிலையில், அதுகுறித்து விளக்கமளித்துள்ள மருத்துவக் கல்வி இயக்ககம், விண்ணப்பங்களை பரிசீலனை செய்து சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் இன்னும் நிறைவடையாததே தரவரிசைப் பட்டியலை வெளியிடப்படாததற்குக் காரணம் எனக் கூறியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U