👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கலை, அறிவியல் மற்றும் நீட் தேர்வில்லாத பட்டப் படிப்புகளில் சேர்க்கை குறித்த மாணவர்களின் வரைவு தரவரிசைப் பட்டியலை சென்டாக் நிர்வாகம் வெளியிட்டது.
இதுகுறித்து சென்டாக் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நீட் தேர்வில்லாத கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகள், பிடெக், பிஎஸ்சி (ஹானஸ்), வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, உயிரியல் அடிப்படையிலான படிப்புகள், பி.பார்ம், சட்டத் துறை படிப்பான பிஏ. எல்எல்பி போன்ற பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான மாணவர்களின் வரைவு தரவரிசைப் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிஏஎன்எம் என்ற படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் மட்டும் தனியாக வெளியிடப்படும்.
இதற்கான பட்டியலை
www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் காணலாம். இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அதை இணையதளத்தில் உள்ள
shorturl.at/msIN1 என்ற இணைப்பில் வருகிற 7- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம்.
இதற்கான குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் முகவரி மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மாணவர்களின் உள் நுழைவு கடவுச் சொல்லைப் பயன்படுத்தி சரிபார்ப்பு குறிப்புகளை பார்வையிடவும், தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர வெளிநாட்டு மாணவர்கள் ஜூலை 4 -ஆம் தேதி முதல் 12- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியல் விவரம்
சென்டாக் நிர்வாகம் வெளியிட்ட நீட் தேர்வில்லாத படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியலில், பிடெக் பாடப் பிரிவில் 3,921 பேரும், கலை அறிவியல் படிப்புகளில் 10,851 பேரும் இடம் பெற்றுள்ளனர். பி.பார்ம். பாடப் பிரிவில் 3,911 புதுவை மாநிலத்தவரும், 838 மற்ற மாநிலத்தவரும், வேளாண்மை மற்றும் தோட்டக் கலைப் படிப்புகளில் 2,726 புதுவை மாநிலத்தவரும், 832 வெளி மாநிலத்தவரும், பி.ஏ. (எல்.எல்.பி.) படிப்பில் 1,159 புதுவை மாநிலத்தவரும், 291 வெளி மாநிலத்தவரும், உயிரியலை அடிப்படையாகக் கொண்ட படிப்புகளில் 4,230 புதுவை மாநிலத்தவரும், 1,176 வெளி மாநிலத்தவரும் இடம் பெற்றுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U