👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட கலந்தாய்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 14,464 மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,350 எம்பிபிஎஸ் இடங்களும், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்களும் உள்ளன.
அவற்றில் 15 சதவீதம் (503 எம்பிபிஎஸ் இடங்கள்; 15 பிடிஎஸ் இடங்கள்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு கொடுக்கப்படுகின்றன. அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) நடத்துகிறது. அதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியது. அதில் பதிவு செய்து விருப்பமான கல்லூரிகளைத் தேர்வு செய்த மாணவர்கள், தங்களது தெரிவை ஜூன் 27-ஆம் தேதி உறுதி செய்தனர்.
இந்நிலையில், முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்றவர்களில் தகுதியானவர்களுக்கு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்த விவரங்கள் இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. அதில், முதல்கட்ட கலந்தாய்வில் 14,464 மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஒதுக்கீடு பெற்ற மாணவ, மாணவிகள் வரும் 8-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு வரும் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரையிலும், மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்கு 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரையிலும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U