👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்றத் தில் புதன்கிழமை நிறைவேறியது.
மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் போது, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவை துறையாக கரு தப்படாமல் பிரிவாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மத்திய அரசால் கடந்த மார்ச் மாதம் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக, 2019-ஆம்ஆண்டு மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்களுக்கு இடஒதுக்கீடு) மசோதாவை மத் திய அரசு கொண்டு வந்துள்ளது. மக்களவையில் இந்த மசோதா கடந்த திங்கள்கிழமை நிறைவேறியது.
இதன்பின்னர் மாநிலங்களவையில் அந்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த மசோதா புதன்கிழமை நிறைவேறியது. இதுகு றித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக் ரியால் நிஷாங்க்கூறுகையில், “மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களை நிரப்புவதற்கு இந்த மசோதா உதவியாக இருக்கும்.
நாட்டில்கல்வித் துறையில் மிகப் பெரிய சீர்திருத்தம் நடைபெறுவதற்கும் இது உத்வேகமாக இருக்கும் என்றார். மசோதாவை கொண்டு வருவதற்கு அவசர சட்ட நடைமுறையை மத்திய அரசு பின்பற்றுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரு கின்றன. இந்த குற்றச்சாட்டு குறித்து ரமேஷ் போக்ரியாலிடம் கேட்கப் பட்டது. அதற்கு போக்ரியால் பதிலளிக்கையில், 'மத்திய அரசின் திட்டத்தை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், மத் திய அரசின் சீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஆதலால்தான் அவசர சட்டத்தை மத்தியஅரசு கொண்டு வந்தது. நீதி மன்றம் முடிவை அறிவித்து விட்டது என்பதற்காக மத்திய அரசு மெள னமாக இருக்காது.
எஸ்.சி., எஸ்டி பிரிவினரின் நலன்களைக் காக்க மத்திய அரசு தொடர்ந்து போராடும். இதற்காகதான் மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதியன்று அவசர சட்டத்தை கொண்டு வந்தது' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U