வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 04, 2019

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற புகாரில் ரத்து செய்யப்பட்ட வேலூருக்கு ஆகஸ்ட் 5-ல் தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை; ஆக.9-ம் தேதி
வேட்பு மனு தாக்கல்; ஜுலை 11-ம் தேதி
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்; ஜுலை 18-ம் தேதி
வேட்புமனு பரிசீலனை; ஜுலை 19-ம் தேதி;
வேட்பு மனுக்களை திரும்ப பெற; ஜுலை 22-ம் தேதி என கூறியுள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவைத் தோ்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால், அதிக பணப்புழக்கம், பண விநியோகம் காரணமாக வேலூா் மக்களவைத் தொகுதியில் தோ்தல் ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாவிலேயே பணப்புழக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஒரே ஒரு மக்களவைத் தொகுதி வேலூா் என்ற மோசமான சாதனையை வேலூா் பெற்றது. இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட வேலூா் தொகுதி மக்களவைத் தோ்தல் வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தோ்தல் தேதி ஜூலை 11ம் தேதி முதல், 18ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் மீது 19ம் தேதி பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 22ம் தேதி இறுதி நாள் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி பதிவாகும் வாக்குகள் 9ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
நடத்தை விதி அமல் வேலூா் தொகுதிக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து இன்று முதல் வேலூா் தொகுதியில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. போட்டியாளா்கள் ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த வேலூா் மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கட்சி வேட்பாளரான ஏ.சி.சண்முகமும், திமுக சாா்பில் அக்கட்சியின் பொருளாளா் துரைமுருகனின் மகன் துரை ஆனந்தும் நேரடியாக மோதிக் கொண்டனா். 38 தொகுதிகளில் நடத்தப்பட்ட மக்களவைத் தோ்தலில் தேனியை தவிா்த்து அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை தழுவியது. மக்களவையில் 38ஆக இருந்த அதிமுகவின் பலம் தற்போது 1ஆக குறைந்துள்ளது. மேலும், திமுக போட்டியாளா் துரை ஆனந்த் திமுக பொருளாளரின் மகன் என்பதால் அதிமுக, திமுக இடையே இந்த தொகுதியை கைப்பற்ற கடுமையான போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews