ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 05, 2019

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
30 சதவீதத்துக்கு குறைவான மாணவர் சேர்க்கை: ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட உத்தரவு மத்திய அரசு குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையில் மாணவர்கள் சேராவிட்டால் அடுத்த ஆண்டு முதல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தைப் பொருத்தவரை அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட 20 சதவீதத்துக்கும் குறைவாகவே சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவது வீண் செலவினம் என்று பள்ளிக்கல்வித்துறை கருதுகிறது. தென் மண்டல தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் நிர்ணயம் செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் (அதாவது 40, 50, 80, 100) சேர்க்கை செய்யப்படுகிறது. 2019-2020-ஆம் கல்வியாண்டு முதல், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அனுமதித்துள்ள மொத்த மாணவர் எண்ணிக்கையில் 30 சதவீத மாணவர்கள் சேர்ந்திருந்தால் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம்.
30 சதவீதத்துக்கு குறைவாக உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை 2019-2020-ஆம் கல்வியாண்டுக்குப் பிறகு அதாவது, 2020-2021 -ஆம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கக் கூடாது. அதற்கு அடுத்த ஆண்டு அரசு உதவி பெறும், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். காரணம் என்ன?: தமிழகத்தில் தற்போது 247 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 29 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, போட்டித்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள முடியாதது போன்ற காரணங்களால் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews