👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் 17-வது மக்களவையின் 16-ஆவது பிரதமராக நரேந்திர மோடி (68) வியாழக்கிழமை பதவியேற்றார். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இதன் மூலம் மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவியேற்றார். பிரதமரைத் தொடர்ந்து 57 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதையடுத்து இன்று அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களுகாகன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது தில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது அதன்படி, மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.2,000-ல் இருந்து 2,500 ஆகவும், மாணவிகளுக்கு ரூ.2500-ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தீவிரவாத நக்சல் தாக்குதல்களில் உயிரிழந்த மாநில போலீஸாரின் குழந்தைகளுக்கான கல்வித்தொகை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 500 பேர் தேர்வு செய்யப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U