உதவி வேளாண் அலுவலர் பதவி ஒரே நாளில் கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணை : டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதன்முறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

உதவி வேளாண் அலுவலர் பதவி ஒரே நாளில் கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணை : டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதன்முறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஒரே நாளில் 580 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமனம் வழங்கி டி.என்.பி.எஸ்.சி. சாதனை புரிந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக வேளாண் துறையில் உதவி வேளாண் அதிகாரி பதவியில் 580 காலியிடங்களுக்கு இந்த ஆண்டு ஏப். 7ல் தேர்வு நடத்தப்பட்டது; 4158 பேர் பங்கேற்றனர். அவர்களில் 797 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இரண்டு நாட்கள் 'ஆன்லைனில்' சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் தரப்பட்டது. பின் 797 பேருக்கும் சென்னை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. சான்றிதழ்களின் அசல் சரிபார்க்கப்பட்டு நேற்று ஒரே நாளில் தகுதி பெற்ற 580 பேர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. இது தேர்வாணைய வரலாற்றில் முதன்முறை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் க.நந்தகுமார் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு வேளாண் விரிவாக்க சார்நிலைப்பணிகளில் அடங்கிய உதவி வேளாண் அலுவலர் பதவிக்காக மொத்தம் 580 காலிப் பணியிடங்களுக்கான தேர்வை கடந்த ஏப்ரல் 7ம் தேதி நடத்தியது. இத்தேர்வில் கலந்துகொண்ட 4158 விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு அடிப்படையில் எழுத்து தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டது.தேர்வு செய்யப்பட்ட 797 விண்ணப்பதாரர்களுக்கு இரண்டே நாட்களில் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் 28ம் தேதி (நேற்று) நேரடியாக தேர்வாணைய அலுவலகத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அன்றே கலந்தாய்வும் நடத்தப்பட்டது. ஒரே நாளில் 797 தேர்வர்களுக்கு நவீன தொழில்நுட்ப உதவியுடன், இணையவழியே பெறப்பட்ட சான்றிதழ்கள் கையடக்க கணினி மூலம் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டு உடனடியாக பணி ஆணை வழங்கப்பட்டது. இது தேர்வாணைய வரலாற்றில் முதன்முறையாகும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews