தமிழகத்தில் 52 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர முதல்வர்கள் இல்லை அதிர்ச்சி தகவல் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

தமிழகத்தில் 52 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர முதல்வர்கள் இல்லை அதிர்ச்சி தகவல் வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் உள்ள 52 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், முழு நேர முதல்வர்கள் இன்றி செயல்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கல்வியியல் கல்லூரிகள் உட்பட மொத்தம் 113 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 52 கல்லூரிகளில் அதாவது சுமார் 46 சதவீதம் கல்லூரிகளில் முழுநேர முதல்வர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.
click here to watch the news video அதே போல் கல்லூரிகளுக்கான இயக்குனரகத்தில், இயக்குனர் பணியிடமும் காலியாக உள்ளது. இந்நிலையில், இந்த 52 கல்லூரிகளிலும் பொறுப்பு முதல்வர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் அன்றாட பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், கல்லூரியின் வளர்ச்சி, தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. அதே போல் கல்லூரிகளில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளிலும், தற்காலிக முதல்வர்கள் தலையிடுவதில்லை எனவும், இதனால் அக்கல்லூரிகளின் வளர்ச்சியும், கல்வித்தரமும் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews