RTE - 1.21 லட்சம் இலவச, 'சீட்' 1.20 லட்சம் விண்ணப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 20, 2019

RTE - 1.21 லட்சம் இலவச, 'சீட்' 1.20 லட்சம் விண்ணப்பம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
தனியார் பள்ளிகளில் உள்ள, 1.21 லட்சம், எல்.கே.ஜி., மற்றும் ஒன்றாம் வகுப்பு இடங்களுக்கு, 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும், 23ம் தேதி வரை, இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, கட்டாயம் கல்வி வழங்க வேண்டும். இந்த கொள்கையை பின்பற்றி, சிறுபான்மை அந்தஸ்து பெறாத, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத இடங்களை, பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு, கட்டணமின்றி ஒதுக்க வேண்டும்.
தமிழகத்தில், இந்த திட்டம், மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவி யில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு என்ற நுழைவு வகுப்பில், 25 சதவீத இடங்களில், மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்படுவர்.இவர்கள், தங்களின் கல்வி கட்டணத்தை, பள்ளிகளில் செலுத்த வேண்டாம். அதற்கு பதில், அந்த மாணவர்கள், அதே பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை படிப்பதற்கு, அரசின் சார்பில் கட்டணம் வழங்கப்படும்.இந்த திட்டத்தின்படி, வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்ரல், 22ல் துவங்கி, நேற்று முன்தினம் முடிந்துள்ளது.
இதில், 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், 1.21 லட்சம் இடங்கள், இலவச கட்டாய கல்வி திட்டத்திற்கு ஒதுக்கப்பட உள்ளன.இவற்றில், ஒரே பள்ளிக்கு பலர் போட்டியிட்டால், அந்த இடங்களுக்கு ஏற்ப, அங்கு மட்டும் குலுக்கல் முறையில், மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.வரும், 22ம் தேதி, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானோர் பட்டியல், வரும், 23ம் தேதி, பள்ளி தகவல் பலகையில் ஒட்டப்படும். பின், 23ம் தேதி, குலுக்கல்முறையில், மாணவர்களுக்கான இட ஒதுக்கீடுவழங்கப்படும்.கட்டாய கல்வி சட்டத்தில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை விட, கூடுதலாக, ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டு, வரும், 27ம் தேதி, காத்திருப்போர் விபரத்துடன், பட்டியல் வெளியிடப்பட உள்ளது.வரும், 31க்குள், இந்த மாணவர் சேர்க்கை இறுதி செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews