எமிஸ் இணையதளம் மூலம் மட்டுமே மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 03, 2019

எமிஸ் இணையதளம் மூலம் மட்டுமே மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பள்ளிகளில் ஆன்லைனில் மட்டுமே மாற்றுச் சான்றிதழ்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. EMIS இணையத்தில் பதிவிறக்கம் செய்த மாற்றுச் சான்றிதழில் சீல் வைத்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட வேண்டும்.EMIS என்ற கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் மூலம் டி.சி வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல். more official details click here நிகழாண்டிலிருந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு எமிஸ் இணையதளம் மூலம் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளி மாணவர்களின் விவரம், கல்வி பயில்வது குறித்த தகவல்கள் அனைத்தும் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (எமிஸ்) தலைமையாசிரியர்களால் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. புதிய மாணவர்கள் சேர்க்கை, தேர்ச்சி, வேறு பள்ளிக்கு மாற்றம், நீக்கம் ஆகிய பள்ளி மற்றும் மாணவர்கள் சார்ந்த அன்றாட பணிகள் அனைத்தும் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அரசுத் தேர்வுக்கான மாணவர்கள் விவரங்களும் எமிஸ் இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தொடக்க, இடைநிலை, மேல்நிலைக் கல்வி மாணவர்கள் இடமாறுதல் மற்றும் கல்வி நிறைவின் போது மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும்போது வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ் இந்த ஆண்டு முதல் எமிஸ் இணையதளம் மூலம் மட்டுமே வழங்க வேண்டும். அனைத்து வகைப் பள்ளிகளும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து தலைமையாசிரியர் கையொப்பம், அலுவலக முத்திரையிட்டு வழங்க எமிஸ் இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எப்படி வழங்குவது?: பள்ளியின் இணைய பக்கத்தில் மாணவர் என்ற இணைப்பில் வழங்கப்பட்டுள்ள Student Transfer Certificate என்ற இணைப்புக்குச் செல்ல வேண்டும். இதையடுத்து எங்ய்ங்ழ்ஹற்ங் என்ற இணைப்பின் மூலம் தோன்றும் புதிய பக்கத்தில் மாணவர் சார்ந்த அங்க அடையாளம், மருத்துவ ஆய்வு, நடத்தை, தேர்ச்சி விவரம், கல்வி பயின்ற காலம், முதல் மொழி, பயிற்று மொழி போன்ற கூடுதல் விவரங்கள் கோரப்படும்.
இந்த விவரங்கள் அனைத்தையும் உள்ளீடு செய்தவுடன் மாணவரது மாற்றுச் சான்றிதழ் ல்க்ச் கோப்பு வடிவில் மாணவரின் புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்யப்படும். பதிவிறக்கமாகும் மாணவரது மாற்றுச் சான்றிதழ் மென்நகலில் அலுவலக முத்திரை, தலைமையாசிரியர் கையொப்பமிட்டு அசலாக வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்நகலை தலைமையாசிரியரின் கையொப்பமின்றி மாணவருக்கு வழங்கக் கூடாது. எனவே, இந்த நடைமுறையைப் பின்பற்றி நிகழாண்டில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் மாற்றுச் சான்றிதழ் எமிஸ் இணையதளம் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews