பெயிலான மாஜிஸ்ட்ரேட்டுகளை பணி நீக்கம் செய்யுங்கள்! பாய்ன்ட் பிடித்து நீதி கேட்கும் ஆசிரியர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 02, 2019

பெயிலான மாஜிஸ்ட்ரேட்டுகளை பணி நீக்கம் செய்யுங்கள்! பாய்ன்ட் பிடித்து நீதி கேட்கும் ஆசிரியர்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஆசிரியத் தகுதி தேர்வில் தகுதி பெறாத அனைவரையும் உடனே பணி நீக்கம் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு எங்களுக்கு மட்டுமல்ல, இப்போது தேர்வில் தோற்றுப்போன மாஜிஸ்ட்ரேட்களுக்கும் பொருந்தும், அதனால் அவர்களை வேலையில் இருந்து தூக்குங்கள் என்று ஆசிரியப் பெருமக்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். காரணம் இதுதான். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 31 மாவட்ட நீதிபதி பதவிகளுக்கான தகுதி தேர்வு ஜனவரி13-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் படி கடந்த பிப்ரவரி 2-ம் தேதி வரை வழக்கறிஞர்கள் ஏற்கனவே நீதிமன்றங்களில் சிவில் நீதிபதியாகவும், மாஜிஸ்திரேட்களாகவும் பணியாற்றி வரும் பலரும் மாவட்ட நீதிபதிக்கான தேர்வில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளார்கள்.
இந்த தேர்வு எழுதிய சிவில் நீதிபதி, மாஜிஸ்திரேட் அனைவரும் முதல் நிலை தேர்விலேயே தோல்வியடைந்து உள்ளார்கள். அதே நேரத்தில் தேர்வு எழுதி தோல்வியடைந்த சிவில் நீதிபதி, மாஜிஸ்திரேட் சிலரின் பெயர் தற்போது மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ள பட்டியலில் இருப்பதாகவும் தகவல் தெரியவருகின்றது.
மாஜிஸ்திரேட் மற்றம் சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே தமிழக அரசு நடத்த கூடிய தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதியாகவும் மாஜிஸ்திரேட்டாகவும் செயல்பட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு போதுமான அனுபவங்களும், சட்டம் சர்ந்த அனுபவ அறிவும் அதிகரித்து இருக்கும் என்ற எந்த விதமான கேள்வியும் இல்லை. இந்சூழ்நிலையில் மேற்படி மாஜிஸ்திரேட் மற்றும் சிவில் நீதிபதியாகவும் பணியற்றி வருபவர்கள் தற்போழுது நடந்த தேர்வில் மாவட்ட நீதிபதி முதன்மை தேர்வில் கலந்து கொண்டு தோல்வி அடைந்துள்ளார்கள்.
இந்த முதன்மை தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அனைத்தும் சாதாரனமாகவே மேற்படி மாஜிஸ்திரேட் மற்றும் சிவில் நீதிபதி அறிந்து வைத்திருக்க வேண்டியவை அதே நேரத்தில் அதனை அன்றாடம் வழக்கின் மூலம் பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால், மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், மேற்படி மாஜிஸ்திரேட் மற்றம் சிவில் நீதிபதி இந்த மாவட்ட முதன்மை தேர்வில் தோல்வி அடைந்து உள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் அவர்களுக்கு மேற்படி மாஜிஸ்திரேட் மற்றம் சிவில் நீதிபதியாகவும் இருக்க தகுதி இல்லாதவர்களாக கருத வேண்டும். Kaninikkalvi.blogspot.com பொதுவாக சட்டம் அனைவரக்கும் சமமானது, இதில் சிவில் நீதிபதி, மாஜிஸ்திரேட் விதிவிலக்கல்ல என்பதே உண்மை ஆகும். சட்டத்தின் ஆட்சியும் நீதியின் தனிச் சிறப்பான மாண்பும் நிலை நாட்டப்பட வேண்டும் எனறால் போதுமான சட்ட அறிவை பெற்று இருப்பார்களை நியமனம் செய்ய வேண்டும் அதே நேரத்தில் தகுதி இல்லாதவர்களை நீக்கம் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.
தகுதி தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு படி தகுதி தேர்வில் வெற்றி பெறாத சிவில் நீதிபதி, மாஜிஸ்திரேட் ஆகியோர் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்றும் ஊதியம் நிறுத்தி வைக்க வேண்டும் மேலும், தகுதியற்ற சிவில் நீதிபதி, மாஜிஸ்திரேட் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். நியாயமாத்தான் தெரியுது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews