கணினி இல்லாத பள்ளிகளில் கணினி மூலமே மாற்றுச் சான்றிதழ் சாத்தியமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 05, 2019

கணினி இல்லாத பள்ளிகளில் கணினி மூலமே மாற்றுச் சான்றிதழ் சாத்தியமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கையால் எழுதும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி; அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலமே மாற்றுச் சான்றிதழ்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்கள் அனைத் தும், கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதியைப் பயன்படுத்தி அச்சு எடுத்து வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், கல்வித் தகவல் மேலாண்மை இணையதளம் (emis.tnschools.gov.in) தொடங்கப்பட்டு, அதில் மாணவர்களின் கல்வி தொடர்பான விவரம், புதிய மாண வர் சேர்க்கை, தேர்ச்சி, வேறு பள் ளிக்கு மாற்றம், நீக்கம், வருகைப் பதிவேடு உள்ளிட்ட மாணவர்கள் சார்ந்த அன்றாட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு தேர்வுக்கான மாணவர்கள் விவர மும் இந்த இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை பள்ளி களை விட்டு வெளியேறும் மாண வர்களுக்கான மாற்றுச் சான்றிதழ், கைகளால் எழுதி பூர்த்தி செய் யப்பட்டு, தலைமை ஆசிரியரின் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையிட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு முதல், மாற்றுச் சான்றி தழ்களை இ.எம்.ஐ.எஸ். இணைய தளம் மூலமே பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தர விட்டுள்ளது. இதுதொடர்பாக, நேற்று முன்தினம் (மே 2) தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
அலுவலக முத்திரை: தொடக்க, இடைநிலை, மேல் நிலைக் கல்வி மாணவர்கள் இட மாறுதல் மற்றும் கல்வி நிறைவின் போது, மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும்போது வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ், கல்வித் தகவல் மேலாண்மை இணையதளம் மூலமே இந்த ஆண்டு முதல் வழங்க வேண்டும். அனைத்து வகை பள்ளிகளிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். இணையதளத்தில் இருந்து மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து, தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையிட்டு வழங்கும் வகையில் இணைய தளத்தில் வசதி செய்து தரப்பட் டுள்ளது.
மாணவர் விவரங்கள்: பள்ளியின் இணையப் பக்கத் தில் மாணவர் என்ற இணைப்பின் மூலம், குறிப்பிட்ட மாணவர் பக்கத் துக்கு செல்லலாம். அந்த பக்கத் தில் மாணவரின் நடத்தை, அங்க அடையாளம், தேர்ச்சி விவரம், மருத்துவ ஆய்வு, கல்வி பயின்ற காலம், முதல் மொழி, பயிற்று மொழி போன்ற விவரங்களை அதற்குரிய பத்தியில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய் யப்பட்டவுடன், மாணவரது மாற்றுச் சான்றிதழ் ‘பிடிஎப்’ வடிவத்தில் மாணவரது புகைப்படத்துடன் பதி விறக்கம் செய்து வழங்க வேண்டும்.
இவ்வாறு பதிவிறக்கம் செய்யப் பட்ட மென் நகலில் தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையிட்டு வழங்க வேண்டும். அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த சுற்றறிக்கையைத் தெரி வித்து, கணினி மூலம் மட்டுமே மாணவர்களுக்கு இந்த ஆண்டு மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படு கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
கணினி இல்லாத பள்ளிகளில் சாத்தியமா? மாற்றுச் சான்றிதழ்களை இணையதளம் மூலமே பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் சுற்றறிக்கை குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில், குறிப்பாக தொடக்கப் பள்ளிகளில் கணினி வசதியே இன்னும் வழங்கப்படவில்லை. கணினி, பிரின்டர் வசதி இல்லாத நிலையில், இணையத்தில் உள்ள மாற்றுச் சான்றிதழில் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றி, அதனை பதிவிறக்கம் செய்து வழங்குவது சாத்தியமானதல்ல. ஏற்கெனவே, மாணவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட விவரங்களை இ.எம்.ஐ.எஸ். இணையத்தில், ஆசிரியர்கள் தங்களது செல்போன்களைப் பயன்படுத்தியே பதிவு செய்து வருகின்றனர்.
மலைக்கிராமங்கள், தொலை தொடர்பு வசதி குறைவான கிராமங்களில் உள்ள பள்ளிகளில், இணையம் மூலம் மாற்றுச்சான்றிதழ் வழங்க முடியாது. மாறாக, இப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் கணினி மையங்களுக்குச் சென்று, அங்கு பதிவு மேற்கொண்டு, மாற்றுச் சான்றிதழ் தரும் நிலை ஏற்படும். எனவே, முதற்கட்டமாக நகரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மட்டும் இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் கணினி, பிரின்டர், இணைய வசதி செய்து கொடுத்த பின்னர், முழுமையாக அமல்படுத்த பள்ளிக் கல்வித் துறை முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews