ஐடிஐ - பயிற்சியில் சேர்வதற்கான அரிய வாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2019 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 14, 2019

ஐடிஐ - பயிற்சியில் சேர்வதற்கான அரிய வாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2019

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகத்தில், 2019-2020 ஆம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 7 மண்டலங்களில் உள்ள 32 இடங்களில், மாவட்ட கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெற, திறனை மேம்படுத்த, வேலைவாய்ப்பை பெற, உலகை இயக்க, மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த தொழிற்பயிற்சியில் நடத்தப்படும் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில், இளைஞர்கள் சேர்ந்து தங்களது திறனை மேம்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2019
கலந்தாய்வு நடைபெறும் தேதி, இடம், நேரம் ஆகிய விவரங்கள் இதே இணையதளத்தில் மே மாத இறுதியில் வெளியிடப்படும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.50
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சேர்க்கை வங்கி கணக்கான, இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு எண்: 6526577760,
Name: AAO and Deputy Director (Admission and Trade Test),
Branch: Saidapet, Chennai, IFSC code - IDIB000S004 -இல் செலுத்தலாம்.
பயிற்சி காலம்: ஒரு வருடம் மற்றும் இரண்டு வருட கால பயிற்சிகள் பயிற்சி ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் துவங்கும். பயிற்சி முடிவில் அனைத்து ஆண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற்சான்றுகள் (NTC) வழங்கப்படும்.
பயிற்சிக்கட்டண விவரம்:
1. பயிற்சிக்கட்டணம் (Tuition Fee) - ஏதுமில்லை
2. காப்புத் தொகை (Caution Deposit) - ரூ.100 (பயிற்சியின் முடிவில் திரும்ப வழங்கப்படும்)
3. விளையாட்டுப்போட்டிகள் தொடர்பான கட்டணம் (Sports Fee) - ரூ.10
4. பதிவுக் கட்டணம் (Registration Fee) - ரூ.25
5. 8,10 ஆம் வகுப்பு மதிப்பெண் சரிபார்க்கும் கட்டணம் (Certificate Verification Fee) - ரூ.50 (தலா ஒரு சான்றிதழுக்கு)
வயது வரம்பு:
1. பொது பிரிவினர் / பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் / மாற்றுத்திறனாளிகள் - 14 முதல் 40 வயது வரை
2. முன்னாள் ராணுவத்தினர் - 14 முதல் 45 வயது வரை
3. போரில் இறந்த ராணுவ வீரரின் மனைவி / விதவை / கணவனால் கைவிடப்பட்டோர் / மகளிர் - குறைந்தபட்ச வயது 14, வயது உச்சவரம்பு இல்லை.
மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் வழங்கப்படும் சலுகைகள்:
(அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மட்டும்)
1. உதவித்தொகை ரூ.500 - மாதந்தோறும் (வருகை நாட்களுக்கேற்ப)
2. விலையில்லா பேருந்து கட்டண சலுகை
3. விலையில்லா மிதிவண்டி
4. விலையில்லா மடிக்கணினி
5. விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைப்படக் கருவிகள்
6. விலையில்லா சீருடை - ஒரு செட்
7. விலையில்லா காலணி - ஒரு செட்
தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கான பயிற்சிக்கட்டணத்தை அரசே செலுத்துகிறது.
1. நகரப்பகுதிகளில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10,000 - வீதம் பயிற்சிக்கட்டணம் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும்.
2. ஊரகப்பகுதிகளில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.12,000 - வீதம் பயிற்சிக்கட்டணம் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: குறைந்த பட்ச கல்வித்தகுதி, பள்ளிகளில் முறையாக பயின்று, 8ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12 வகுப்பில் தேர்ச்சி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு: 1. 8ஆம் வகுப்பு தேர்ச்சி - குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளுக்கு மட்டுமே, இந்த கல்வித்தகுதி உள்ளது. 2. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி - குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளுக்கு மட்டுமே, இந்த கல்வித்தகுதி உள்ளது. 3. 8 வகுப்பு / 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தரவரிசை நிர்ணயிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில், kaninikkalvi.blogspot.com -என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
குறிப்பு: ஒரு மாணவர் பல மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி இணையதள விண்ணப்பம் சமர்பிக்க வேண்டும். மேலும், இது குறித்த முழு தகவல்களுக்கு, Click Here PDF Notice
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews