ரூ. 250 கோடி உதவித்தொகை ஊழல்; சி.பி.ஐ., சோதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 15, 2019

ரூ. 250 கோடி உதவித்தொகை ஊழல்; சி.பி.ஐ., சோதனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில், 250 கோடி ரூபாய், ஸ்காலர்ஷிப் ஊழல் தொடர்பாக, 22 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
முறைகேடு ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர், ஜெய்ராம் தாக்குர் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆண்டுதோறும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர், 2.38 லட்சம் பேர், &'ஸ்காலர்ஷிப்&' எனப்படும், கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கின்றனர். மாநில அரசு வழங்கும் இந்த உதவித் தொகையில், கல்வி நிறுவனங்கள் முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், 2013 - -17ம் ஆண்டு வரை, 250 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதும், அதில், வெளி மாநில கல்வி நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. அதனால், இந்த ஊழல் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும்படி, மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்தியது. இதையடுத்து, இந்த வழக்கு, சி.பி.ஐ., வசம் மாற்றப்பட்டது.
முக்கிய ஆவணங்கள் இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகள், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள, 22 கல்வி மையங்களில் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, கல்வி உதவித் தொகை முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews