சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு: 96.4% மதிப்பெண் பெற்ற கேஜ்ரிவால் மகன்; ஸ்மிருதி இரானி மகன் மார்க் எத்தனை? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 02, 2019

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு: 96.4% மதிப்பெண் பெற்ற கேஜ்ரிவால் மகன்; ஸ்மிருதி இரானி மகன் மார்க் எத்தனை?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
சிபிஎஸ்இ +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகின. இதில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மகன் புல்கித் கேஜ்ரிவால் 96.4% மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
நாடு முழுவதும் ஏப்ரல் 4-ம் தேதியன்று தேர்வு முடிந்த நிலையில், ஒரு மாதத்துக்குள்ளாக முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இந்த தேர்வை 18.1 லட்சம் மாணவர்கள் மற்றும் 12.9 லட்சம் மாணவிகள் என மொத்தம் 31 லட்சம் பேர் எழுதினர். இதில் 83.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மகன் 96.4% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இத்தகவலை கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதேபோல மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் மகன் ஸோர் இரானி 91% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இத்தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்வதாக ஸ்மிரிதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மோடி வாழ்த்து: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து இளம் நண்பர்களுக்கும் வாழ்த்துகள். அவர்களுக்கு ஆதரவளித்த பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுகள்'' என்று தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews