👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
மதுரை காமராஜ் பல்கலையில் பாலியல் தொல்லைக்கு ஆளான கேரள ஆராய்ச்சி மாணவிக்கு மாற்று வழிகாட்டி (பிஎச்.டி., கைடு) ஏற்பாடு செய்து பல்கலை நடவடிக்கை எடுத்துள்ளது.
இப்பல்கலை திரைப்படம் மற்றும் மின்னணு ஊடக ஆய்வு மையம் பேராசிரியர் கர்ண மகாராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரிடம் படித்த கேரள மாணவி, கடந்தாண்டு டிசம்பரில் புகார் அளித்தார். மேலும் பிஎச்.டி., பதிவிற்கு 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.இப்புகார் குறித்து பாலியல் ரீதியான புகார்களை விசாரிக்கும் (ஐ.சி.சி.,) கமிட்டி தலைவர் பேராசிரியை வசந்தா தலைமையில் விசாரணை நடந்தது. அதன் அறிக்கையை அப்போதிருந்த பூவலிங்கம் தலைமையிலான கன்வீனர் கமிட்டியிடம் (துணைவேந்தர் பணியிடம் காலியாக இருந்ததால்) அளிக்கப்பட்டது. அதில் மாணவிக்கு மாற்று வழிகாட்டி நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இதற்கிடையே வழிகாட்டி பொறுப்பில் இருந்து கர்ணமகாராஜன் மாற்றப்பட்டார்.இதையடுத்து பிஎச்டி., பாதிக்காத வகையில் மாற்று வழிகாட்டி வழங்க வேண்டும் என பல்கலைக்கு மாணவி கடிதம் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாணவி தரப்பில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு புகார் அளிக்கப்பட்டது.இதற்கிடையே புதிய துணைவேந்தர் கிருஷ்ணன் பொறுப்பேற்ற பின் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், பேராசிரியர் கர்ணமகாராஜனுக்கு கட்டாய ஓய்வு அளிக்க பரிந்துரைக்கப்பட்டது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, இதழியல் துறை தலைவர் பேராசிரியை ஜெனிபாவை, மாற்று வழிகாட்டியாக ஏற்பாடு செய்து பல்கலை நடவடிக்கை எடுத்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U