ஆன்லைனில் வரி தாக்கல் தொடக்கம்..! ITR 1 மற்றும் ITR 4 வெளியீடு..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 09, 2019

ஆன்லைனில் வரி தாக்கல் தொடக்கம்..! ITR 1 மற்றும் ITR 4 வெளியீடு..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருமான வரித் துறை வருமான வரிப் படிவம் 1 மற்றும் வருமான வரிப் படிவம் 4-ஐ வெளியிட்டிருக்கிறது. 2018 - 19 நிதி ஆண்டில் சம்பாதித்த வருமானத்துக்கு செலுத்த வேண்டிய வருமான வரிகளை இந்த படிவங்களை நிரப்பித் தான் செலுத்த வேண்டும். மற்ற வருமான வரிப் படிவம் 2,3,5,6,7 எல்லாம் தயார் செய்து கொண்டிருக்கிறார்களாம். கூடிய விரைவில் வெளியிடுவார்களாம். https://www.incometaxindiaefiling.gov.in/downloads/offlineUtilities?lang=eng
என்கிற இணைப்பில் இந்த புதிய வருமான வரிப் படிவம் 1 மற்Ruம் வருமான வரிப் படிவம் 4 கிடைக்கின்றன. Excel, Java என இரண்டு ஃபார்மெட்களில் கிடைக்கின்றன. ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்து நிரப்பி ஆன்லைனிலேயே சமர்பித்துவிட சம்பளம் & பிசினஸ் யாருக்கு எந்த படிவம்: இதில் வருமான வரிப் படிவம் 1-ஐ 2018 - 19 நிதி ஆண்டில் 50 லட்சம் ரூபாய்க்கு கீழ் சம்பளமாக வாங்கியவர்கள், சம்பாதித்தவர்கள் மட்டுமே நிரப்ப வேண்டும். ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர்கள், பட்டியலிடப்படாத பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்கள் எல்லாம் வருமான வரிப் படிவம் 1-ஐ நிரப்பக் கூடாது.
Business and Profession பிசினஸ் & ப்ரொஃபஷனல்கள்: வருமான வரிப் படிவம் 4-ஐ டாக்டர், வழக்கறிஞர், ஆடிட்டர் போன்ற ப்ரொஃபஷனல்கள் மற்றும் சிறிய அளவில் பிசினஸ் செய்பவர்கள் நிரப்ப வேண்டும். இந்து கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள், எல் எல் பி என்றழைக்கப்படும் Limited Liability Partnership நிறுவனங்கள் கூட ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் ஈட்டினால் கூட இந்த வருமான வரிப் படிவம் 4-ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆதார் கட்டாய அதார்: இந்த புதிய படிவத்தில் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் அனைவருமே கட்டாயமாக ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆதார் பதிவு எண்ணையாவது கட்டாயம் குறிப்பிட வேண்டும். அப்படி இல்லை என்றால் வருமான வரிப் படிவம் ஏற்றுக் கொள்ளப்படாது. தேதி கடைசி தேதி: வரும் ஜூலை 31, 2019-க்குள் தனி நபர்கள், பட்டையக் கணக்காளர்களிடம் தங்கள் நிறுவன அல்லது பிசினஸ் கணக்குகளை தணிக்கை செய்யத் தேவை இல்லாத பிசினஸ் செய்பவர்கள் அனைவருமே தங்கள் வருமான வரிப் படிவங்களை தாக்கல் செய்திருக்க வேண்டும்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews