👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
💐அவசியம் இறுதி வரை படியுங்கள்.💐
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் பெருமக்களே!
*31.03.2019 முதல் பயிற்சி வகுப்பில் அனைவருக்கும் படிவம் - 12 தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்டது*.
*ஓர் இனிப்பான மகிழ்ச்சியான செய்தி*✉✉✉✉
நீங்கள்தான் 2019 பாராளுமன்ற தேர்தலில் முதல் வாக்கை செலுத்திய பெருமைக்குரியவர்கள்.
*ஆம்.*
எதிர்வரும் ஞாயிறு 07.04.2019 ல் நடைபெறப்போகும் *இரண்டாவது பயிற்சி வகுப்பில் உங்கள் இருக்கை தேடி தபால் வாக்கு வரப்போகிறது*.
நான்தான் *முதலில் வாக்களித்தேன்* என்ற திமிரோடும் செருக்கோடும் நெஞ்சுரத்தோடும் தேர்தல் பணியாற்ற செல்லலாம்.
🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
கவனமாக படிக்கவும்🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
அஞ்சல் வாக்கு செலுத்தும் விதம் - விளக்கம்- கவனிக்க!
*01.🌹முதலில் உறுதி மொழி படிவத்தில் (declaration Form) 13A ல் முன்,பின் என இரண்டு பக்கங்கள் இருக்கும்.*
*🌹 முன்புறம் மட்டும் மேல்பகுதியில் வாக்கு சீட்டு எண்ணை (Ballot paper no) எழுதி கையெழுத்திட வேண்டும்*
*🌹கீழ்பகுதியில் உறுதிமொழி படிவத்தில் மேலொப்பம் இட (attestation) ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் இரண்டு தாசில்தார்கள் சீலுடன் ரெடியாக இருப்பார்கள்.*
*🌹அதன் கவர்மீது (Postal Ballot Paper cover 13 - B) வாக்கு சீட்டு எண் குறிப்பிட வேண்டும்*.
நமது நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை கவர்மீது வாக்கு சீட்டு எண்ணை அவர்களே குறிப்பிட்டு உள்ளார்கள்.
தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மிக்க நன்றி.
*🎤மிக மிக கவனம்.*🎤
வாக்கு சீட்டில் பந்துமுனைப் பேனாவால் நீங்கள் விரும்பும் *வேட்பாளருக்கு நேரில் அந்த கட்டத்திற்குள் மட்டும் இருக்கும்படி ஒரே ஒரு டிக் √* அடிக்கவும்.
மை பேனாவால் டிக் அடித்து பின்பு மடிக்கும் போது ஒருவேளை மற்றோரு சின்னத்திலோ அல்லது மற்றொரு வேட்பாளருக்கு எதிராகவோ மை கசிந்து விட்டால் அது செல்லாத ஓட்டாகிவிடும்.
எனவே டிக் √ குறியீட்டை மிக கவனமாக அடியுங்கள்.Over writing வேண்டாம்.
சின்னத்தில் ஒரு டிக்,வேட்பாளர் பெயரில் ஒரு டிக் என *இரண்டு டிக் அடித்து விடாதீர்கள்.*
*03.🌹அடுத்து படிவம் - 13 C.இது ஒரு கவர்.*
இதில் படிவம் 13A (உறுதிமொழி படிவம்) மற்றும் 13 -B வாக்குசீட்டை வைத்து ஒட்டப்பட்ட கவர் இரண்டையும் (Ballot paper உள்ளகவர்) இந்த 13 -C கவரினுள் வைத்து ஒட்ட வேண்டும்.
இந்த *கவரின் மீது இடது பக்க ஓரத்தில் signature of the sender என இருக்கும். இதன் மீதும் கண்டிப்பாக கையெழுத்து இடவேண்டும்.*
இல்லை என்றால் நமது ஓட்டு கவரினை பிரித்து பார்க்காமல் அப்படியே தூர வைத்து விடுவார்கள்.
நமது வாக்கு செல்லாத வாக்காகிவிடும்.
*04🌹நிறைவாக படிவம் 13 -D.இது வாக்காளருக்கான வாக்களிக்க உதவும் வழிகாட்டி குறிப்பு*.(Information letter)
இந்த படிவத்தின் இறுதியில் இரண்டு கோடுகள் இருக்கும்.
*அதில் 08 am on 23.05.2019 என எழுத வேண்டும்*.
குறிப்பு: ஒரு தேர்தல் பயிற்சி வகுப்பில் இரண்டு தாசில்தார்கள் Attest பண்ண சீலுடன் இருப்பார்கள்.
*நாம் வரிசையில் நின்று பொறுமையாக வாக்களிக்க வேண்டும்.*
மிக்க நன்றி தேர்தல் நடத்தும் அலுவலர்களே.
இத்துடன் *தபால்வாக்கு குறித்து பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவங்களையும் இணைத்து உள்ளேன்.*
இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் எந்ந நேரமானாலும் பள்ளி வேலைநேரம் தவிர்த்து (12.04.2019 வரை) தொடர்பு கொள்ளுங்கள்.
இப்பதிவினை *தமிழகம் முழுவதும் உள்ள தபால் வாக்கு அளிக்க இருக்கும் அனைத்து தேர்தல் பணி அலுவர்களுக்கும் கொண்டு சேருங்கள்.*
📌📌📌தபால் வாக்கு குறித்த தேர்தல் ஆணையத்தின் தெளிவுரை கடிதம் (13 பக்கம்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.📌📌📌
*எனது வாக்கு*
*எனது உரிமை*
மறந்துவிடாதீர்கள்.
*உங்கள் வாக்கு உங்கள் உரிமைகளையும் கோரிக்கைகளையும் பெற்றுதரும்.*
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்