CEO சஸ்பெண்ட்: ஆவணங்களை திருத்திய புகாரில் நடவடிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 30, 2019

CEO சஸ்பெண்ட்: ஆவணங்களை திருத்திய புகாரில் நடவடிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கரூர் மாவட்ட முதன்மை கல்வி தங்கவேல் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். நாளை ஒய்வு பெற இருந்த நிலையில் கல்வி அதிகாரி தங்கவேல் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளானார் சேலத்தில் பணியாற்றியபோது அலுவலக உதவியாளர் நியமனத்தில் முறைகேடு செய்ததற்காக சஸ்பெண்ட் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பணி ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றியவர் க.தங்கவேல்(58). இவர் இன்று (ஏப்.30) பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில், அவரை நேற்று பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக தங்கவேல் பொறுப்பேற்பதற்கு முன்பு, சேலம் மாவட்டக் கல்வி அலுவலராக பணியாற்றியபோது, அலுவலக உதவியாளர் பணி நியமனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒருவரை பணியமர்த்துவதற்கு பதிலாக 8-ம் வகுப்பு தோல்வியடைந்த நபரை பணி நியமனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக புகார் எழுந்ததும் அதை மறைக்க, தான் அங்கு பதவியேற்பதற்கு முன்பே அலுவலக உதவியாளர் பணி நியமனம் செய்யப்பட்டுவிட்டது போன்று ஆவணங்களை அவர் திருத்தியதாகவும் கூறப்படுகிறது. இம்முறைகேடு தொடர்பாக வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் சஸ்பெண்ட்மேலும், முறைகேடு நடைபெற்றபோது சேலம் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றிய கண்காணிப்பாளர் மற்றும் பிரிவு எழுத்தர் ஆகியோரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, கரூர் மாவட்ட பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்றுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews