👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தரப்பில் முன் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2,979 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில், 1,783 வாக்குச்சாவடிகள் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை. மற்ற 1,196 வாக்குச்சாவடிகள் தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட் பட்டவை. தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ராஜபாளை யம் சட்டப்பேரவைத் தொகுதியில் 261 வாக்குச்சாவடிகளும், ஸ்ரீவில்லி புத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி யில் 281 வாக்குச்சாவடிகளும் உள் ளன. இவற்றையும் சேர்த்து தென்காசி மக்களவைத் தொகுதி யில் 1,738 வாக்குச்சாவடிகள் உள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை, அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் தேர்தலுக்கு முன் தினம் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும்.
பெங்களூருவில் இருந்து 7,450 குப்பிகள் அழியாத மை திருநெல்வேலி மாவட்ட தேர்தல் பிரிவுக்கு வந்துள்ளன. 1,400 வாக்கா ளர்கள் வரை உள்ள வாக்குச்சாவடி க்கு தலா 2 மை குப்பிகள் அனுப்பிவைக்கப்படும். 1,400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 3 குப்பிகள் அழியாத மை அனுப்பி வைக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் வெளிமாநில போலீஸார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மஹாராஷ்டிரா மாநில சிறப்பு காவல் படையினர் 2 கம்பெனி, மத்திய ஆயுதப்படை போலீஸார் 2 கம்பெனி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸார் 4 கம்பெனி தூத்துக்குடி வந்துள்ள னர். மேலும், தூத்துக்குடி ஆயுதப் படை போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸாரும் இணைந்து பாது காப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தேர்தலில் மக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தி னர்.
தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய அணி வகுப்புக்கு எஸ்பி முரளி ராம்பா தலைமை வகித்தார். கூடுதல் கண்காணிப்பாளர் வேதரத்தினம், டிஎஸ்பிக்கள் பிரகாஷ், முத்தமிழ், மாரியப்பன், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய ஆயுதப்படையினர், வெளிமாநில போலீஸார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஆயுதப் படையினர், உள்ளூர் போலீஸார் என, மொத்தம் 500 பேர் அணி வகுப்பு நடத்தினர். பழைய பேருந்து நிலையம் முன் அணிவகுப்பு நிறைவடைந்தது.
எஸ்பி முரளி ராம்பா கூறும் போது, “மத்திய ஆயுதப்படை போலீஸார் மற்றும் வெளிமாநில சிறப்பு காவல் படையினர் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள். இன்று மாலை 5 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு எந்த தடையும் இல்லை. அதற்கு பிறகு பிரச்சாரம் மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் அவர்.
தாளமுத்துநகரில் இருந்து திரேஸ்புரம் வரையும், செய்துங்க நல்லூர், வைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர், கோவில் பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடந்து வருகிறது.
வாக்குப்பதிவு முடிந்த தும் மின்னணு வாக்கு இயந்திரங் கள் வாக்கு எண்ணும் மையமான கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்படுகின்றன. இதற்காக 6 சட்டப்பேரவை தொகுதி வாரியாக தனி அறைகளில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயிலில் இருந்து மின்னணு இயந்திரங்கள் வைக்கப் படும் அறைகள், வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் அலுவலகங்கள் என மையம் முழுவதும் 50 கண் காணிப்பு கேமராக்கள் பதி வாகும் காட்சிகளை கண் காணிக்க கட்டுப்பாடு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடுவர்.வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ம் தேதி வேட்பாளர்கள், அரசியல் கட்சி முகவர்கள் முன்னி லையில் மின்னணு இயந்திரங்களில் சீல் அகற்றப்பட்டு வாக்குகள் எண் ணப்படுகின்றன.
இதை முன்னிட்டு கோணம் பாலிடெக்னிக் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
மேலும் மைதானம், வளாக பகுதிகளில் துணை ராணுவத்தினரும், போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்படுகின்றன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U