👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
வேலுார் லோக்சபா தொகுதியில், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த, கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, தலைநகர் டில்லியில், நேற்று தேர்தல் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, வேலுாரில் தேர்தலை ரத்து செய்வது குறித்து, இரண்டு நாளில் அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மறுநாள் அதிகாலை, துரைமுருகனுக்கு நெருக்கமான, சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான, சிமென்ட் கிடங்கில், வருமான வரித்துறை அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர். சோதனையில், மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த, கோடிக்கணக்கான மதிப்புள்ள, புத்தம் புது ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இப்பணம், வாக்காளர்களுக்கு வினியோகிக்க, வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், 2016 சட்டசபை தேர்தலில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில், தேர்தல் ரத்து செய்யப்பட்டது போல, வேலுாரிலும் தேர்தல் ரத்தாகுமா என்ற, கேள்வி எழுந்தது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்
அதன்பின், மாவட்ட தேர்தல் அலுவலர், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கை அடிப்படையில், தலைமை தேர்தல் அதிகாரி, டில்லியில் உள்ள, இந்திய தலைமை
தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பினார். அதில், துரைமுருகன் வீட்டிலும், அவருக்கு நெருக்கமானவர்கள் வீட்டிலும் நடந்த சோதனை குறித்த, முழு விபரங்களையும் தெரிவித்துள்ளார்.அதன் அடிப்படையில், நேற்று டில்லியில் தேர்தல் அதிகாரிகள், அவசர ஆலோசனை நடத்தினர்.
ஏற்கனவே, நம்நாட்டில், பணம் வினியோகத்திற்காக, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, சென்னை - ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அந்த வரிசையில், வேலுாரும் சேருமா என்பது, இரண்டு நாட்களில் தெரிய வரும்.
- நமது நிருபர் -
வேலுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., பொருளாளர், துரைமுருகனின் மகன், கதிர் ஆனந்த், தி.மு.க., சார்பில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., சார்பில், புதிய நீதிக்கட்சி தலைவர், ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், துரைமுருகன் வீட்டில், மார்ச், 30ல், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில், 10 லட்சம் ரூபாய் பணம் மட்டுமே சிக்கியது. மறுநாள், துரைமுருகனுக்கு நெருக்கமான சீனிவாசனின், சிமென்ட் கிடங்கில், வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர்.
இவர்களின் அறிக்கை அடிப்படையில், வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலை ரத்து செய்யும் முடிவை, தேர்தல் ஆணையம், விரைவில் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்