அரசுப் பள்ளியை மேம்படுத்த ஏசி வசதி.. அசத்திய முன்னாள் மாணவர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 28, 2019

அரசுப் பள்ளியை மேம்படுத்த ஏசி வசதி.. அசத்திய முன்னாள் மாணவர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
நாகர்கோவில் அரசு தொடக்கபள்ளியில், மாணவர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்த ஏசி வசதி செய்து கொடுத்த பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரின் முயற்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பை கிடைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இடலாக்குடியில் அமைந்துள்ளமது செய்குதம்பி பாவலர் நினைவு தொடக்கப்பள்ளி. இப்பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் மாணவர்கள் வருகையை அதிகப்படுத்த அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருந்து வரும் மாலிக் அகமது பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறார். மற்ற பள்ளிகளை விட சிறப்பு பெற்ற பள்ளியாக இந்த அரசு பள்ளியை மாற்ற என நினைத்த அவர், தனது சொந்த பணத்தில் பள்ளிக்கு ஏ. சி வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளார். சமையல் கலை வல்லுனரான இவர், அந்த பள்ளியின் முன்னாள் மாணவரும் ஆவார்.
தான் படித்த பள்ளி மேலும் வளர வேண்டும் என தொடர்ந்து விரும்பி செயல்பட்டு வருகிறார் மாலிக். ஆண்டுதோறும் தான் படித்த பள்ளியின் மாணவர் சேர்க்கையை மேம்படுத்த, தன்னால் இயன்ற அளவிற்கு உதவிகளை செய்து வருகிறார் . தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியை மேம்படுத்த யாரிடமும் உதவி கேட்காமல் தன்னால் முடிந்ததை செய்யும் இவர் பணிகள், அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. ஏழை மாணவர்கள் அதிகம் படிக்கும் இப்பள்ளியில், தனியார் பள்ளிக்கு நிகரான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அதை பார்த்து அதிக மாணவர்கள் பள்ளியில் சேர வேண்டும் என்பதே தனது ஆசை என கூறியுள்ளார் மாலிக் அகமது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews