காக்கை குருவி எங்கள் ஜாதி -அழிந்துவரும் சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்றிவரும் ஆசிரியர் குடும்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 07, 2019

காக்கை குருவி எங்கள் ஜாதி -அழிந்துவரும் சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்றிவரும் ஆசிரியர் குடும்பம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள் உள்ள நிலையில் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக கடைபிடிக்கப்படுகின்றது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களிலும் வீடுகளில் கூடு கட்டி சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகள் இன்று காண்பதற்கே அரிதாகி வருகின்றன.


இந்நிலையில் திருச்சியை சேர்ந்த யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா குடும்பத்தினர் பறவைகளுக்காக வீட்டில் கூடு வைத்து அதை பாதுகாக்க முயற்சி எடுத்து வருகின்றனர். இதற்க்காக இவர்கள் தங்கள் இல்லத்தில் தாங்களே தயாரித்த தேங்காய் நாரினால் ஆன கூடுகளை அமைத்து பறவைகளுக்கான உணவும் நீரினையும் வழங்கி வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் “பூச்சிக்கொல்லி மருந்துகளை தானியங்கள் , பயிர்கள் மற்றும் செடிகளுக்கு தெளிப்பதால் அதனை உண்ணும் பறவை இனங்கள் பாதிப்படைகின்றன.சிட்டுக்குருவிகள் மனிதர்கள் வாழும் வீடுகளில் பயமின்றி வாழ்ந்த காரணத்தால் மனையுறை குருவி என்று சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.


சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு பகுதிகளில் குருவிகள் கூடு அமைத்து உணவளித்து பாதுகாத்தால் சிட்டுக்குருவிகளின் கீச்….கீச்..குரல் இனிமையை அனைவரும் கேட்டு ரசிக்க முடியும்
நீர் ,நிலம் ,காற்று மாசுபடுவதால் காடுகள் அழிக்கப்படுவதாலும் சிட்டுக்குருவிகள் நம்மை விட்டு பிரிந்து வருகின்றன. இந்தியா உட்பட ஒரு சில நாடுகள் சிட்டுக்குருவிகளை காக்கும் கடமையை மக்களுக்கு அறிவுறுத்த அஞ்சல்தலைகளையும் வெளியிட்டுள்ளன. டெல்லி மாநில அரசு அம்மாநிலத்தின் பறவையாக சிட்டுக்குருவியை தேர்வு செய்துள்ளது.


காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடிச் சென்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நம் இனத்தின் ஒரு பகுதியை முற்றிலும் அழிந்து விடும் படி விட்டுவிடாமல் அதற்க்கான முயற்சியை நாம் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும்” என்றார்

Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews