நாட்டு வளர்ச்சிக்கான நல்லவர் யார் தீர்ப்பு உங்கள் கையில்! இன்று தீர்மானிக்கட்டும் உங்கள் ஓட்டு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 18, 2019

நாட்டு வளர்ச்சிக்கான நல்லவர் யார் தீர்ப்பு உங்கள் கையில்! இன்று தீர்மானிக்கட்டும் உங்கள் ஓட்டு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஐந்து ஆண்டுகளுக்கு திருத்தி எழுத முடியாத ஓட்டுச்சீட்டு, இன்று உங்கள் கையில் இருக்கும் துருப்புச்சீட்டு. இன்று நீங்கள் அழுத்தப்போகும் பட்டன் தான், உங்களை ஆளப்போகிறவர் யார் என்பதையும், நாட்டின் வளர்ச்சியையும் தீர்மானிக்கப்போகிறது. தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களும், போட்டியிடும் வேட்பாளர்களும், அவர்களுக்கு ஆதரவான ஆட்களும், அனல் பறக்கும் பிரசாரத்தை முடித்துவிட்டு, வாக்காளர்கள் சிந்திப்பதற்காக நேற்று ஒருநாள் ஓய்வும் கொடுத்து விட்டனர். இனி முடிவெடுக்கப்போவது, வாக்காளர்களாகிய நீங்கள்தான்!சாதி, மதம், இனம், ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், கிராமவாசி, நகரவாசி, ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்... என எவ்வித பேதமும் இன்றி, இந்தியாவில் பிறந்த 18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும், சம உரிமையாக ஆளுக்கு ஒரு ஓட்டு வழங்கப்பட்டுள்ளது.
அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டிய அற்புத தருணம் இது.கோவை லோக்சபா தொகுதியில் உள்ள, 2,045 வாக்குச்சாவடிகள் மூலம், 19 லட்சத்து, 58 ஆயிரத்து 577 வாக்காளர்கள், இன்று ஓட்டு போட உள்ளனர். மாநகரம், புறநகரம், கிராமங்கள், மலைக்கிராமங்கள்... என பலதரப்பட்ட வாழ்விடங்களில் வசிக்கும் மக்களும், இந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்க உள்ளனர்.காலை 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணி வரையில் நடைபெற உள்ளது. மாலை வரையில் நேரம் உள்ளதே என்று காத்திருக்காமல், காலை எழுந்ததும் முதல் கடமை ஓட்டுப்போடுவதே, என்பதை மனதில் கொண்டு, செயலாற்ற வேண்டும்.நமது ஒரு ஓட்டால் என்னவாகி விடப்போகிறது என்று அலட்சியப்படுத்தாமல், அனைவரும் தவறாது ஓட்டு போட வேண்டும்.சொந்த சாதி, சொந்த மதம், சொந்த கட்சி... இப்படி பாகுபாடு பார்க்காமல், பணத்துக்கு, பொருளுக்கு விலை போகாமல், இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் விலை மதிப்பற்ற ஓட்டை, சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இப்பகுதியில் வாழும் மக்களின் சொந்த முயற்சியில், தொழில்கள் வளர்த்தெடுக்கப்பட்டு, உருவான மாநகரம் இது. உட்கட்டமைப்பு வசதிகள் துவங்கி, விமான நிலைய விரிவாக்கம் வரையில், முழுமையான வளர்ச்சியை கோவை அடைய, இன்னும் கடந்து செல்ல வேண்டிய துாரம் எவ்வளவோ இருக்கிறது.இவற்றையெல்லாம் செயல்படுத்தக்கூடியவர் யார்? லோக்சபாவில் நமது குரலை உரக்க ஒலிக்கக்கூடியவர் யார்? எம்.பி.,யான பிறகு எளிதில் அணுகக்கூடியவர் யார்? சாதி, இன பாகுபாடு பார்க்காதவர் யார்? இங்குள்ள தொழில்களை மேலும் வளர்த்து,
அடுத்த நிலைக்கு கொண்டு செல்லக்கூடியவர் யார்?இப்படி உங்களுக்குள்ளே அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். உங்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு, பதிலாக யார் வருகிறாரோ, அவரே உங்களின் தேர்வாக இருக்கட்டும்!காலை 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணி வரையில் நடைபெற உள்ளது. மாலை வரையில் நேரம் உள்ளதே என்று காத்திருக்காமல், காலை எழுந்ததும் முதல் கடமை ஓட்டுப்போடுவதே என்பதை மனதில் கொண்டு, செயலாற்ற வேண்டும்.உங்கள் ஒரு ஓட்டு கூடவெற்றியை தீர்மானிக்கும்!நமது ஒரு ஓட்டால் என்னவாகி விடப்போகிறது என்று அலட்சியப்படுத்தாமல், அனைவரும் தவறாது ஓட்டு போட வேண்டும். ஏனென்றால், உங்கள் ஒரு ஓட்டுக் கூட வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்தது. சொந்த சாதி, சொந்த மதம், சொந்த கட்சி... இப்படி பாகுபாடு பார்க்காமல், பணத்துக்கு, பொருளுக்கு விலை போகாமல், நாட்டு வளர்ச்சிக்கு உதவ போகிறவர் என ஆராய்ந்து ஓட்டுப் போடுங்கள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews