5 ஆண்டுகள் நாட்டை ஆள்பவரை தேர்வு செய்ய ஒரு விரல் புரட்சி செய்வோம்: காலை 7 மணிக்கே சென்று வாக்களியுங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 18, 2019

5 ஆண்டுகள் நாட்டை ஆள்பவரை தேர்வு செய்ய ஒரு விரல் புரட்சி செய்வோம்: காலை 7 மணிக்கே சென்று வாக்களியுங்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்க தயார் நிலையில் உள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஐந்தாண்டுகள் நாட்டை ஆளப்போவது யார் என்பதற்கான மிக முக்கிய ‘ஒரு விரல் புரட்சி’ செய்யும் நாள் இன்று. ஒவ்வொருவரும் மறக்காமல், எந்த வேலையாக இருந்தாலும் வாக்குச்சாவடிக்கு போய் வாக்களிக்க தவறாதீர்கள். தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும், 18 சட்டமன்ற தொகுதியிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க 160 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் போலீசார் 1.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 67,720 வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அழியாத மை உள்ளிட்ட தேர்தலுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய 16 வகையான பொருட்கள் அனைத்தும் நேற்று மாலையே கொண்டு செல்லப்பட்டன.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். முன்னதாக காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நம்பகத்தன்மையுடன் உள்ளதா என்பதை அனைத்து அரசியல் கட்சி ஏஜென்ட்கள் முன்னிலையில் செயல்முறை விளக்கம் அளித்து காட்டப்படும். இதையடுத்து சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, இன்று மாலை 6 மணி வரை இடைவேளை இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெறும். மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று நடைபெறும் தேர்தலில் மட்டும் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2,95,94,923 பேரும், பெண் வாக்காளர்கள் 3,02,69,045 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 5,790 பேரும் அடங்கும். தேர்தல் பணியில் மட்டும் 3.5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கு நேற்று மாலையே சென்று விட்டனர். இதையடுத்து நேற்று மாலை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அழியாத மை உள்ளிட்ட தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, வாகனங்கள் சரியான பாதையில்தான் செல்கிறதா என்பதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும், பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க ஆங்காங்கே தடுப்பு கட்டைகள் அமைத்து முழு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மட்டும் 160 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு கம்பெனியில் 90 வீரர்கள் இருப்பார்கள். அதன்படி, 14,400 ராணுவ வீரர்கள் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர தமிழக போலீசார் சுமார் 80 ஆயிரம் பேர், ஓய்வு பெற்ற போலீசார், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், என்எஸ்எஸ் வீரர்கள், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் 67,720 வாக்குப்பதிவு மையங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ராணுவ வீரர்கள் மற்றும் பெரும்பாலான போலீசாருக்கு பாதுகாப்புக்காக துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. இன்று தேர்தல் வாக்குப்பதிவின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த மையங்கள் முழுவதும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த வாக்குச்சாவடிகள் முழுவதும் வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் வாக்குப்பதிவுகளை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே தேர்தல் அதிகாரிகள் நேரடியாக பெரிய திரைகளில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் மத்திய அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் (மைக்ரோ அப்சர்வர்கள்) தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது கட்டாயம் தங்களிடம் உள்ள வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வங்கி பாஸ்புக், ஆதார்கார்டு உள்ளிட்ட தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 அடையாள அட்டைகளை காட்டி வாக்களிக்கலாம். பூத் சிலிப் காட்டி வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டாது. வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வசதிக்காக குடிநீர் வசதி, மினிவிசிறி வசதி, கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க செல்வதற்கு வசதியாக அனைத்து மையங்களில் வீல்சேர் வசதி உள்ளது. வாக்குப்பதிவு மையத்திற்குள் செல்போன் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. கள்ள ஓட்டு போட முயன்றால் 2 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. பார்வையற்றோர், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் உதவியாளரை அழைத்துக் கொண்டு வாக்களிக்க வரலாம். ஆனால் அந்த உதவியாளருக்கு 18 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்.வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, அனைத்து ஆவணங்களும் இருந்து வாக்குப்பதிவு மையத்தில் அவரின் ஓட்டை வேறு யாராவது கள்ள ஓட்டாக போட்டிருந்தால், ஓட்டுப்பதிவு அலுவலரிடம் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம். அவருக்கு 49பி என்ற விதிப்படி வாக்குச்சீட்டில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். பின்னர் விசாரணைக்கு பிறகு தேவைப்படும்பட்சத்தில் வாக்கு எண்ணிக்கையில் அந்த ஓட்டு சேர்க்கப்படும். எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசியில் உள்ள நோட்டாவுக்கு (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) வாக்களிக்கலாம். அதனால், தமிழகத்தில் வாக்களிக்க தகுதி உள்ள அனைவரும் மறக்காமல் இன்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுங்கள். உங்கள் வாக்கு, உங்கள் உரிமையை ஒரு விரல் புரட்சி மூலம் ஏற்படுத்துங்கள்.
காலையிலேயே ஓட்டுபோடுங்க ப்ளீஸ்... கோடைகாலம் என்பதால் அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரி அதிகளவில் வெயில் கொளுத்துகிறது. அதனால், தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்... காலையில் 7 மணிக்கே தங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களியுங்கள் ப்ளீஸ்... வெயில் கொடுமையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். ஓட்டு போடுவது ஒவ்வொரு இந்தியனின் ஜனநாயக கடமை. 5 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலில், நாம் வாக்களிக்காவிட்டால், நமக்கு விருப்பம் இல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள். அதன்பிறகு நாம் விரும்புகிறவர்கள் ஆட்சிக்கு வர இன்னும் 5 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதனால் கண்டிப்பாக, உங்கள் ஜனநாயக கடமையை செய்து, நீங்கள் விரும்பும் வேட்பாளர் வெற்றிபெற கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews