👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பின் கோரிக்கையை ஏற்று நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பிச்சுமணி, MPhil நுழைவுத் தேர்வினை வரும் ஜூன் மாதம் மீண்டும் நிச்சயமாக நடத்துவோம் என உறுதி கூறியுள்ளார் என்று ஏபிவிபி மாணவர்கள் கூறினர். நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கடந்த மாதம் ( மார்ச் ) 2019-2020 கல்வி ஆண்டிற்கான எம்பில்., பிஎச்டி நுழைவு தேர்வினை நடத்தியது.
ஆனால், அந்த நேரத்தில் பெருவாரியான மாணவர்கள் தேர்வினை எழுத இயலாமல் போனது. காரணம், நுழைவுத் தேர்வு நடைபெற்ற நாள் வேலை நால் என்பதால் கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் தேர்வு குறித்த தகவல் சரியான முறையில் மாணவர்களிடம் சென்று சேரவில்லை என மாணவர்கள் குறை கூறினர்.
இந்நிலையில், மாணவர்களின் மன வருத்தத்தை ஏபிவிபி., மாணவ தலைவர்கள் நெல்லை பல்கலை துணைவேந்தரிடம் எடுத்துக் கூறினர். இதை அடுத்து, நெல்லை பல்கலைத் துணைவேந்தர் பிச்சுமணி, MPhil நுழைவுத்தேர்வு வரும் ஜூன் மாதம் கட்டாயமாக நடத்துவோம் என உறுதி அளித்துள்ளார். மாணவர் அமைப்பினருடனான இந்த சந்திப்பில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக ஏபிவிபி தலைவர் R.P.ராமன் மற்றும் துணைத்தலைவர் குமார் துணை செயலாளர் திருமலை குமார் , மாணவ தலைவர் சுரேஸ் , மண்டல அமைப்புச் செயலாளர் பிருத்விராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U