ஜப்பானில் உயர்கல்வி: உதவித்தொகையுடன் படிக்க அரிய வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 20, 2019

ஜப்பானில் உயர்கல்வி: உதவித்தொகையுடன் படிக்க அரிய வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஜப்பானிய அரசின் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 2020ஆம் ஆண்டுக்கான உதவித்தொகையுடன் கூடிய பட்ட மேற்படிப்பு (Master's) மற்றும் ஆய்வுக்கு (PhD) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது
ஜப்பானில் முதுநிலை மற்றும் ஆய்வு படிப்புகளை உதவித்தொகையுடன் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். ஜப்பானிய அரசின் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 2020ஆம் ஆண்டுக்கான உதவித்தொகையுடன் கூடிய பட்ட மேற்படிப்பு (Master's) மற்றும் ஆய்வுக்கு (PhD) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. மெக்ஸ்ட் (MEXT scholarship) எனப்படும் இதைப் பெறுவதற்கான விவரங்களைப் பார்க்கலாம். தகுதி: முதுநிலை பட்ட மேற்படிப்பை மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர் இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆய்வுப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர் முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஜப்பானிய மொழியில் பட்டமேற்படிப்பை மேற்கொள்ள அ) முதுநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பவர் ஜப்பானிய மொழியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுநிலை அல்லது இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆ) ஜப்பானிய மொழி அல்லாத பிற இளநிலை பட்டங்களைப் பெற்றவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஜப்பானிய மொழியில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் (N2 certificate of the Japanese Language Proficiency Test) பெற்றிருக்க வேண்டும். இந்தச் சான்றிதழை ஜப்பானிய அறக்கட்டளை வழங்குகிறது. ஜப்பானிய மொழியில் ஆய்வுப் படிப்பு மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஜப்பானிய மொழியில் ஜப்பானிய மொழியில் முதுநிலை பட்டம் பெற்றிருத்தல் அவசியம்.
வயது வரம்பு 35 வயதுக்குள் இருக்க வேண்டும் (1985, ஏப்ரல் 2ஆம் தேதி அல்லது அதற்கு முன் பிறந்தவராக இருக்க வேண்டும்.) பலன்கள் இலவச மெட்ரிகுலேஷன் கட்டணமாக ரூ.1,76,250 (தேசிய பல்கலைக்கழகத்தில் சேர்ந்தால்) இலவச டியூஷன் கட்டணமாக ரூ.3,34,800/ஆண்டுக்கு (தேசிய பல்கலைக்கழகத்தில் சேர்ந்தால்) மாதாந்திர செலவுகளுக்காக ரூ.90,000/மாதத்துக்கு ஒரு முறை திரும்பி வருவதற்கான விமான டிக்கெட் மேலும் விவரங்களுக்கு https://www.in.emb-japan.go.html
இந்த உதவித்தொகையைப் பெற தேர்வாகும் மாணவர்கள் 2020ஆம் ஆண்டுல் ஏப்ரல்/அக்டோபர் மாதத்தில் ஜப்பான் செல்ல வேண்டியிருக்கும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews