👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பாரத ஸ்டேட் வங்கிவாடிக்கையாளர்கள், தங்களது ஏடிஎம் கார்டை சிப் பொருத்திய கார்டாக மாற்றிக்கொள்ளவருகிற ஏப்ரல் 29ம் தேதி கடைசி நாளாகும்.
ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய ஏடிஎம் கார்டுகள் எதுவும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு குறித்த ஒரு அறிவிப்பை முன்னதாகவே வெளியிட்டு இருந்தது. அதாவது 2018 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தங்களது ஏடிஎம் கார்டை இ.எம்.வி சிப்பொருத்திய ஏடிஎம் கார்டாக மாற்றிக்கொள்ளும்படி, கூறியிருந்தது. அதன்படி, எஸ்.பி.ஐ வங்கிகளில் ஏடிஎம் காரோடுகளை மாற்ற மக்கள் கூடினர். இந்நிலையில் பலர் தங்களது கார்டை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மாற்ற இயலாத சூழ்நிலையில், வருகிற ஏப்ரல் 29ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, ஏப்ரல் 29ம் தேதிக்கு முன்னதாக எஸ்.பி.ஐவாடிக்கையாளர்கள் தங்களது ஏடிஎம் கார்டை இ.எம்.வி சிப்பொருத்திய கார்டாகமாற்றி கொள்ள வேண்டும் என்றும்இதற்காக வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள எஸ்.பி.ஐ கிளையை அணுக அறிவுறுத்தியிருந்தது. தற்போது எஸ்.எம்.எஸ் மூலமாகவும், வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு மேல் பழைய ஏடிஎம் கார்டு வைத்திருந்தால், அதன் மூலமாக எந்த பணப் பரிவர்த்தனைகளும் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆனால், அதே நேரத்தில் நெட்பேங்கிங் மூலமாக, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய ஏடிஎம் கார்டுகள் எதுவும் இயங்காது. அதற்கு மறுநாளே பழைய கார்டுகள் அனைத்தும் செயலிழக்கச் செய்யப்படும் என்று வங்கி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கித் துறையில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள், முக்கியமாக ஏடிஎம் மையங்களில் நடக்கும் திருட்டுகளை தடுக்கவே இந்த சிப் பொருத்திய கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U