👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
நாடு முழுவதும் ஏப்.,11 துவங்கி மே 19 வரை லோக்சபா தேர்தல் நடக்கும். தேர்தல் முடிவுகள் மே 23 வெளியிடப்படும் என்ற தேர்தல் கமிஷனின் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது.
இதனையடுத்து அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்? எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனம் மற்றும் எதிர்ப்பை தாண்டி 2வது முறையாக மோடி பிரதமர் ஆவாரா? என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. காங்., தலைவர் ராகுலுக்கும் இந்த தேர்தல் கடும் சவாலாக இருக்கப் போகிறது.
இந்த தேர்தலில் கட்சிகளின் பலம், பலவீனம், வாய்ப்புக்கள், சவால்கள் ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன் விபரம்:
பலம்: பிரதமர் மோடி திடமான தலைவராக விளங்குவது தேஜ., கூட்டணிக்கு பெரும் பலம். சமீபத்தில் புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாக்.,ல் பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய துணிவான சர்ஜிக்கல் ஸ்டிரைக் மோடியின் தலைமைக்கு கூடுதல் பலம். ஏழைகளுக்கு ஆதரவாகவும், ஊழலுக்கு எதிராகவும் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள், அமித்ஷாவின் வியூகங்களும் பா.ஜ.,வின் பலம்.
பலம் : பா.ஜ.,வுக்கு எதிராக சமீப காலமாக காங்., முன்னெடுத்த பிரசாரங்கள், ராகுல் முக்கிய தலைவராக உருவெடுத்துள்ளது ஆகியன காங்.,கின் பலமாக பார்க்கப்படுகிறது. ராகுல் தன்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திக் கொள்ளாமல், எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணியில் தன்னை இணைத்து கொள்ள முயற்சி எடுப்பதும் மற்றொரு பலம்.
பலவீனம் : ரபேல், விவசாயிகள் பிரச்னை, சகிப்புத்தன்மையின்மை, வேலை வாய்ப்பு, தற்போது பாக்., மீதான விமானப்படை தாக்குதலை கேள்வி கேட்டு வருவது, பா.ஜ.,வை தொடர்ந்து எதிர்ப்பது என எதிர்மறை பிரசாரத்தை காங்., மேற்கொண்டது அக்கட்சியின் பலவீனம். காங்., ஆட்சியில் நடந்த ஊழல்கள், மோடி மீது 2014 தேர்தலின் போது சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தவறியது காங்.,ன் பெரிய பலவீனம்.
வாய்ப்புக்கள்: மத்திய அரசின் பல நலத்திட்டங்கள் இன்னும் துவக்க நிலையிலேயே உள்ளதால் கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்பு போன்ற வாக்குறுதிகளை அளிக்கலாம். பா.ஜ., எம்.பி.,க்கள் சிலரே அக்கட்சிக்கு எதிராக பேசி வருவதும் காங்.,கிற்கு கூடுதலாக பா.ஜ., எதிர்ப்பு பிரசாரத்தை தீவிரப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
சவால்கள் : பாக்., பயங்கரவாதிகளுக்கு எதிராக மோடி எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகள் அரசு மீதான செல்வாக்கை அதிகப்படுத்தி உள்ளது. காங்.,கிற்கு ஏற்பட்டுள்ள பெரிய பின்னடைவு. காங்., பிரியங்காவை முன்னிலைப்படுத்தி செல்வாக்கை உயர்த்த நினைத்தாலும், அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் அவர் மீதான வழக்குகள் சரிவாக அமைகின்றன. சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியில் காங்., சேர்த்துக் கொள்ளப்படாதது பலவீனமாக அமைந்துள்ளது.
பலம் : திரிணாமுல் காங், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திமுக, ஒய்எஸ்ஆர் காங்., ஆகியன தங்களின் மாநிலங்களில் பலமான கட்சிகளாக உள்ளன பல மாநிலங்களில் காங்.,ஐ விட பா.ஜ.,விற்கே சவாலாக அமையும். பெரிய மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்ற பா.ஜ.,வும் - காங்.,கும் அதிக அளவில் போராட வேண்டி இருக்கும் என்பதால் அது 3வது அணிக்கே சாதகமாக அமையும்.
சவால்கள் : மாநில கட்சிகள் ஒட்டுமொத்தமாக இணைந்து கூட்டணி அமைத்திருப்பதால் எந்த மாநிலத்தில் யாருக்கு ஓட்டளிப்பது என்ற குழப்பம் வாக்காளர்களிடம் ஏற்பட வாய்ப்புள்ளது. பிரதமரை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி பலரிடமும் நம்பிக்கையை பெறவில்லை. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியிலிருந்து காங்., புறக்கணிப்பட்டிருப்பது 3வது அணியின் ஒற்றுமையில் விரிசலாக பார்க்கப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்