இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 39 எம்.பி. தொகுதிகளில் 845 வேட்பாளர்கள் போட்டி: சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 269 பேர் களத்தில் உள்ளனர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 30, 2019

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 39 எம்.பி. தொகுதிகளில் 845 வேட்பாளர்கள் போட்டி: சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 269 பேர் களத்தில் உள்ளனர்


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459




தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற் றும் சட்டப்பேரவை இடைத்தேர் தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 39 மக்களவைத் தொகுதிகளில் 845 பேரும், 18 சட்டப்பேரவை தொகுதிகளில் 269 பேரும் களத்தில் உள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுடன் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.
மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட 1,576 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட 514 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டிருந்தன. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 27-ம் தேதி நடந்தது. இதில் தூத்துக்குடி, மத்திய சென்னை உட்பட பல தொகுதிகளின் முக்கிய வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் புகார்கள் அடிப்படையில் நிறுத்தி வைக்கப்பட்டு, நீண்ட பரிசீலனைக்குப் பிறகு ஏற்கப்பட்டன. மக்களவை தேர் தலுக்கு தமிழகம் முழுவதும் தாக்கல் செய்யப்பட்ட 1,576 வேட்பு மனுக்களில் 937 மனுக்கள் ஏற்கப்பட்டன. சரியான ஆவணம் இல்லாதது உட்பட பல்வேறு காரணங்களால் 639 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தாக்கல் செய்யப் பட்ட 514 வேட்புமனுக்களில், 305 மனுக்கள் ஏற்கப்பட்டன. 209 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தேர்தலில் போட்டி யிட விரும்பாதவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை 29-ம் தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
92 மனுக்கள் வாபஸ்
அதன்படி, நேற்று மாலை 3 மணி வரை 39 மக்களவை தொகுதிகளில் 68 ஆண் வேட்பாளர்கள், 24 பெண் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர். அதிகபட்சமாக, தூத்துக்குடி தொகுதியில் 14 வேட் பாளர்கள் மனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர். காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், நாகை, தஞ்சை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் யாரும் மனுவை திரும்பப் பெற வில்லை. இதையடுத்து, நேற்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. அதன்படி, 39 மக்களவைத் தொகுதிகளில் 779 ஆண்கள், 65 பெண் கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் சார்பில் 57 பேரும் மாநில கட்சிகள் சார்பில் 55 பேரும் பதிவு செய்த கட்சிகள் 174 மற்றும் சுயேச்சைகள்559 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 42 பேரும், தென்சென்னையில் 40 பேரும் களம் காண்கின்றனர். பெண் வேட்பாளர் களை பொறுத்தவரை அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 5 பேர் போட்டியிடு கின்றனர். தென்சென்னை தொகுதியில் மட்டும் ஒரே ஒரு மூன்றாம் பாலின வேட்பாளர் போட்டியிடுகிறார்.
திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, திண்டுக் கல், கன்னியாகுமரி ஆகிய மக்களவை தொகுதிகளில் பெண் வேட்பாளர்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுயேச்சை வேட்பாளர்களைப் பொறுத்த வரை, கரூர் தொகுதியில் அதிகபட்ச மாக 32, தென்சென்னை 28 மற்றும் தூத்துக்குடியில் 26 பேர் போட்டி யிடுகின்றனர்.
சட்டப்பேரவை தொகுதிகளில் 29 ஆண், 7 பெண் வேட்பாளர்கள் என 36 பேர் கடந்த 2 நாட்களில் மனுக்களை திரும்பப் பெற்றனர். இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியலில் 241 ஆண், 28 பெண் என மொத்தம் 269 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 40, சாத்தூர் தொகுதியில் 30 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பெண் வேட்பாளர்கள் அதிகபட்சமாக நிலக்கோட்டையில் 6 பேர், பெரம்பூரில் 4 பேர் போட்டியிடுகின்றனர். சாத்தூர், தஞ்சை, அரூர், பாப்பிரெட்டிபட்டி தொகுதிகளில் பெண் வேட்பாளர்களே இல்லை. சட்டப்பேரவை இடைத்தேர்த லில் எந்த அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியும் வேட்பாளர்களை நிறுத்த வில்லை. மாநில கட்சிகளின் சார்பில் 36 வேட்பாளர்கள், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் சார்பில் 46 வேட்பாளர்கள், சுயேச்சைகள் 187 பேர் களத்தில் உள்ளனர். இதில், பெரம்பூர் (33), சாத்தூர் (25) ஆகிய தொகுதிகளில் சுயேச்சைகள் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னம் ஒதுக்கீடு
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளி யான நிலையில், அந்தந்த தொகுதி களின் தேர்தல் நடத்தும் அதிகாரி கள், சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணியை தொடர்ந்தனர்.
டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர் களுக்கு தேர்தல் ஆணையமே பரிசுப் பெட்டி சின்னத்தை பொதுவான சின்னமாக ஒதுக்கியதால், அந்த வேட் பாளர்களுக்கு அந்த சின்னம் ஒதுக் கப்பட்டது. மீதமுள்ள 157 சுயேச்சை சின்னங்களில், அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ சார்பில் போட்டியிடும் மத் தியசென்னை வேட்பாளர் தெஹ்லான் பாகவிக்கு மட்டும் காஸ் சிலிண்டர் சின்னமும், அதிமுக கூட்டணியில் தஞ்சையில் போட்டியிடும் தமாகா வேட்பாளருக்கு ஆட்டோ ரிக் ஷா சின்னமும் ஒதுக்கப்பட்டது. அமமுக சார்பில் கோரப்பட்டிருந்த குக்கர் சின்னம், பல தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளி யிடப்பட்டு சின்னமும் ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் பிரச் சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் 18 பேர் போட்டி
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த 37 மனுக்களில் 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 18 பேரின் மனுக்கள் ஏற்கபட்டன. கடந்த இரு நாட்களில் யாரும் மனுக்களை திரும்ப பெறவில்லை. கடந்த தேர்தலில் 30 பேர் களத்தில் இருந்தனர்.

Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews