சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி மதிப்பெண் பட்டியலும் சான்றிதழும் ஒன்றாக்கப்படும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 20, 2019

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி மதிப்பெண் பட்டியலும் சான்றிதழும் ஒன்றாக்கப்படும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
நடப்பு கல்வி ஆண்டு முதல் 10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலும் சான்றிதழும் இணைத்து ஒற்றை ஆவணம் வழங்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ மூத்த அதிகாரி கூறியதாவது: இந்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண், சான்றிதழ் உள்ளடக்கிய ஒற்றை ஆவணம் அளிக்கப்பட உள்ளது. இதனையே சான்றிதழாகவும் பயன்படுத்தலாம். நகல் தேவைப்பட்டால் சிபிஎஸ்இ அறிவுறுத்திய சான்று சமர்ப்பித்து பெற்று கொள்ளலாம். பிளஸ்2 மாணவர்களுக்கு வழக்கம்போல், மதிப்பெண்கள் பட்டியல், சான்றிதழ் தனித்தனியே வழங்கப்படுவது தொடரும்.
மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் தனியாக வழங்கப்படாது. மதிப்பெண் பட்டியல் மட்டுமே வழங்கப்படும். 2020 கல்வியாண்டு முதல், இட ஒதுக்கீட்டு பிரிவில் வரும் மாணவர்கள், 3 முறை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்ச்சி பெறாவிட்டால் அடுத்த ஆண்டு மட்டுமே அவர்கள் தேர்வு எழுத முடியும். முந்தைய தேர்வில் பெற்ற செய்முறை பயிற்சி மதிப்பெண்கள் அடுத்த தேர்வில் சேர்க்கப்படும். இந்த துணை விதிகளை சேர்க்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது’’ என்றும் அவர் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் பட்டியலை சான்றிதழுடன் வழங்க சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. ஒவ்வொரு ஆண்டும் 10ம் வகுப்பு தேர்வு முடிந்ததும் மதிப்பெண் பட்டியல் தனியாகவும் கல்வி சான்றிதழை தனியாகவும் வழங்கும். இதனால் குழப்பம் ஏற்பட்டது. இதற்கு முடிவு கட்டும் வகையில் நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலையும் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழையும் இணைத்து ஒன்றாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews