TNPSC Group-II Mains on 23.02.2019 - Question Cum Answer Booklet instead of separate Question Paper and Answer - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 22, 2019

TNPSC Group-II Mains on 23.02.2019 - Question Cum Answer Booklet instead of separate Question Paper and Answer

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்திக்குறிப்பு : தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண் 15/2018 ல் தொகுதி – II ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்காக விண்ணப்பங்களைப் பெற்று அதற்கான முதனிலைத்தேர்வினை (PRELIMINARY EXAMINATION) கடந்த 11.11.2018 அன்று முற்பகல் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி, அதற்கான முடிவுகளை 17.12.2018 அன்று வெளியிட்டது.
அதற்கான முதன்மை எழுத்துத்தேர்வினை (MAIN WRITTEN EXAMINATION) வரும் சனிக்கிழமை (23.02.2019) அன்று முற்பகல் 15 மாவட்ட தலைநகரங்களில் நடத்தவுள்ளது. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpscexams.net) வெளியிடப்பட்டுள்ளது. விவரித்து விடை எழுதும் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு (MAIN WRITTEN EXAMINATION) விடைத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுநாள் வரையில் முதன்மை எழுத்துத்தேர்வுக்கு (MAIN WRITTEN EXAMINATION) கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவை தனித்தனியே வழங்கப்பட்டு வந்தது.
23.02.2019 அன்று முற்பகல் நடைபெறவுள்ள தொகுதி- II முதன்மை எழுத்துத்தேர்வுக்கு (MAIN WRITTEN EXAMINATION) கேள்வி மற்றும் விடைத்தாள் இரண்டும் ஒருங்கிணைந்த ஒரே விடைப் புத்தகமாக வழங்கப்படவுள்ளது. இவ்விடை புத்தகத்தில் ஒவ்வொரு கேள்வியும் தனித்தனியே அச்சிடப்பட்டு அக்கேள்வியின் கீழே விடையளிப்பதற்கான போதிய இடமும் வழங்கப்பட்டிருக்கும். தேர்வர்கள் அந்தந்த கேள்விக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விடையளிக்க வேண்டும். விடையளிப்பதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தைத் தவிர ஏனைய இடங்களில் எழுதப்படும் விடைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
எனவே தேர்வர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விடையளிக்க வேண்டும் என்பதால் அவர்கள் விடையளிக்கும் போது மிகுந்த கவனத்துடன் அடித்தல் திருத்தல் ஏதுமின்றி விடையளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு முடிந்த ஓரிரு நாட்களில் மேற்படி தேர்வின் வினா விடைப்புத்தகத்தின் மாதிரி நகல் (SPECIMEN QUESTION CUM ANSWER BOOKLET) தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்படும்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews