நீதிமன்ற உத்தரவு அப்பட்டமாக மீறல்: பாரதியார் பல்கலை மீது கவர்னரிடம் புகார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 14, 2019

நீதிமன்ற உத்தரவு அப்பட்டமாக மீறல்: பாரதியார் பல்கலை மீது கவர்னரிடம் புகார்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கோவை, பாரதியார் பல்கலை நிர்வாகம், சிண்டிகேட் உறுப்பினர் வயது தொடர்பான நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாக மீறியுள்ளதாக, தமிழக கவர்னரிடம், புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவின்படி, தனியார் கல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கு, 62 வயதும், பல்கலை பேராசிரியர்களுக்கு, 60 வயதும், அரசு கல்லுாரிகளை சார்ந்தவர்களுக்கு, 58 வயதும், பணி ஓய்வு வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வயதை கடந்தவர்கள், பல்கலை பதிவாளர், சிண்டிகேட், செனட், இயக்குனர் உள்ளிட்ட எவ்வித பதவிகளிலும் தொடர இயலாது. ஆனால், கோவை பாரதியார் பல்கலையின், சிண்டிகேட் உறுப்பினர் மற்றும் கம்பன் கலை கல்லுாரி முதல்வர், சின்னதுரை, குறிப்பிட்ட வயதை கடந்தும், சிண்டிகேட் பதவியில் தொடர்வதாகவும், பல்கலை சம்பந்தமான நிர்வாக கோப்புகளில், கையெழுத்திடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, பல்கலையின், மூன்று சிண்டிகேட் உறுப்பினர்கள், பல்கலை வேந்தரான, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம், 9ம் தேதி புகார் அளித்துள்ளனர். விதிகளை மீறி, தனிப்பட்ட நபருக்கு பல்கலை நிர்வாகம் அளிக்கும் சலுகைகள், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது.பல்கலை நிர்வாகிகள், இது தொடர்பான கேள்விகளுக்கு, தொடர்ந்து மழுப்பலான பதில்களை மட்டுமே அளித்து வருகின்றனர். சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: விதிமீறலை சுட்டிக்காட்டும் சிண்டிகேட் உறுப்பினர்கள் அவமதிக்கப்படுகின்றனர். புகார் குறித்து, சிண்டிகேட் உறுப்பினர்கள், பதிவாளருக்கு கடந்த மாதமே மனு அளித்தும், பல்கலை தரப்பில் எவ்வித பதிலும் இல்லை. குறிப்பிட்ட வயதை கடந்தும், எதற்காக, அவரை பதவியில் வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. தனி நபருக்காக, நீதிமன்ற உத்தரவு, அரசாணை அப்பட்டமாக மீறப்படுகிறது. இது குறித்து, கவர்னரிடம் புகார் அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.பாரதியார் பல்கலை பதிவாளர், வனிதா கூறுகையில், &'&'இந்த விவகாரம் பற்றிய தகவல், உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது; விரைவில் பதில் அளிக்கப்படும்,&'&' என்றார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews