AIIMS வேலைவாய்ப்பு: பெர்சனல் அசிஸ்டன்ட்: காலிப்பணியிடம் : 247 - கடைசி நாள் : 15.03.2019. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 22, 2019

AIIMS வேலைவாய்ப்பு: பெர்சனல் அசிஸ்டன்ட்: காலிப்பணியிடம் : 247 - கடைசி நாள் : 15.03.2019.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பெர்சனல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 247 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.03.2019. எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் கற்பித்தல் மற்றும் அலுவலக பணிகளுக்கு 247 இடங்கள் எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் மற்றும் ஸ்டெனோ, பார்மசிஸ்ட் போன்ற பணிகளுக்கு 247 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப் படுகிறது. இதன் கிளைகள் நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. தற்போது ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் ஸ்டெனோகிராபர், பார்மசிஸ்ட், பிரைவேட் செகரட்ரி, பெர்சனல் அசிஸ்டன்ட், ஆபீஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட அலுவலக பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 132 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதில் அதிகபட்சமாக பார்மசிஸ்ட் பணிக்கு 27 இடங்களும், ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு 16 இடங்களும் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணி களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம். வயது வரம்பு ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 35 வயதுடையவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி பார்மசிஸ்ட், எம்.ஏ., எம்.எஸ்.சி, ஜெனரல் நர்சிங், பி.இ., பி.டெக், எம்.சி.ஏ. சிவில் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மற்றும் பிளஸ்-2 படிப்புடன் ஸ்டெனோகிராபி உள்ளிட்ட பலதரப்பட்ட படிப்பு முடித்தவர் களுக்கும் பணிவாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும்.
இது பற்றிய அறிவிப்பு பிப்ரவரி 9-15 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விரிவான விவரங்களை www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews