கைது செய்தாலும் போராட்டம் தொடரும் : ஜாக்டோ-ஜியோ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 27, 2019

கைது செய்தாலும் போராட்டம் தொடரும் : ஜாக்டோ-ஜியோ

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
கைது செய்தாலும் போராட்டம் தொடரும் : ஜாக்டோ-ஜியோ நிர்வாகி மாயவன் பேட்டி அமைச்சர் ஜெயக்குமார் பொய்களை சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை குழப்பி வருகிறார் என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை, எங்களை கைது செய்தாலும் போராட்டம் தொடரும் என்றும் ஜாக்டோ -ஜியோ நிர்வாகி மாயவன் கூறினார்.அரசு ஊழியர்களுடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அரசிடம் போதுமான நிதி இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று பேட்டி அளித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜாக்டோ -ஜியோ நிர்வாகி மாயவன் கூறியதாவது:
7வது ஊதியக்கமிஷன் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றவில்லை. ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 20 சதவீதம் வீதம் சம்பளத்தை வழங்கலாம் அல்லது அந்த பணத்தை எங்களின் பிஎப் பணத்துடன் இணைத்து, ஓய்வுபெறும்போது வழங்கலாம். கவர்னர், முதல்வர், அமைச்சர், எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஒருநாள் பணியில் இருந்தால் கூட இவர்கள் எல்லாம் ஓய்வூதியம் பெறுகிறார்கள். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எல்லாரும் நிலுவை தொகையை வாங்கிக்கொள்வார்கள். அது மக்களின் வரிப்பணம் இல்லையா. ஆனால் எங்களுக்கு வழங்குவதற்கு மட்டும், நிதி இல்லை என்று சொல்வதை ஏற்க முடியாது. பழைய ஓய்வூதிய திட்டத்தை தற்போது மாநில அரசு அமல்படுத்தினால் கூட, இதற்கான பணப்பலன்களை வழங்குவதற்கு, 15 ஆண்டுகளுக்கு பின்தான் ஓய்வூதியம் வழங்க வேண்டி இருக்கும். உடனடியாக தமிழக அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது. ஆனால், அரசு ஆசிரியர்களை திசை திருப்பும் நடவடிக்கைகளில்தான் ஈடுபடுகிறது. போராடும் ஆசிரியர்களை கட்டுப்படுத்த கைது நடவடிக்கையில் இறங்கி முயற்சி செய்கிறது. வழக்குகளை போடுகிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்தினால், எங்களிடம் பிடித்து வைத்துள்ள பல ஆயிரம் கோடி ரூபாயை இந்த அரசு உடனடியாக வழங்க வேண்டி வரும். ஆனால் அந்த நிதியை மக்கள் நலத்திட்டங்களுக்கு இந்த அரசு பயன்படுத்தலாம். அதை விட்டுவிட்டு, அடம்பிடிக்கிறார்கள். சர்வாதிகார போக்கில் செயல்பட்டு வருகிறார்கள். பலகட்டங்களாக போராட்டங்களை ஒத்தி வைத்த பின்னரே இப்போது நாங்கள் போராட்டம் நடத்தியுள்ளோம்.எந்த அரசியல் கட்சியும் எங்கள் போராட்டத்தை தூண்டவில்லை. எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் பென்சன் வாங்குகிறார்கள். நிலுவை தொகையை வாங்குகிறார்கள். 58 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த பென்சன் எங்களுக்கு இல்லை என்பதை ஏற்க முடியாது. ஆசிரியர்களை திசை திருப்புவதற்கு பொய்யான விஷயங்களை சொல்லி, அரசுத்தரப்பில் ஆசிரியர்களை குழப்பி வருகிறார்கள். ஜனவரி 28ம் தேதி (நாளை) மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு வருகிறது. ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகள் ஆஜராக உள்ளோம். அதேபோல், அரசுத்தரப்பிலும் ஆஜராக உள்ளார்கள். எங்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள அரசு நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும். திட்டமிட்டபடி ஜனவரி 28ம் தேதி எங்களின் போராட்டம் தொடரும். இவ்வாறு மாயவன் கூறினார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews