நாங்கள் கேட்பது முன்னாள் முதல்வர் அறிவித்ததைத் தான் - ஜாக்டோ-ஜியோ கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 28, 2019

நாங்கள் கேட்பது முன்னாள் முதல்வர் அறிவித்ததைத் தான் - ஜாக்டோ-ஜியோ கோரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
ஜாக்டோ-ஜியோ கோரிக்கை குறித்து முதல்வர் அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ-ஜியோ நேற்று அறிவித்தது.சென்னை திருவல்லிக்கேணியில் நடந்த ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, தியாகராஜன், வெங்கடேசன், சங்கரபெருமாள் ஆகியோர் நேற்று அளித்த பேட்டி: கடந்த 22ம் தேதி முதல் 10 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றக் கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். முதல்வர் கவனத்தை ஈர்க்க நடத்தப்படுகிறது. நேற்று அமைச்சர் ஜெயக்குமார் ஓரு பேட்டி அளித்துள்ளார். அதில் ஜாக்டோ-ஜியோ கோரிக்கையை புறந்தள்ளி மக்களிடம் தவறான ஒரு கருத்தை தெரிவித்து வருகிறார். அவரின் பொய்யுரையை மறுப்பதற்காக இந்த பேட்டி அளிக்கப்படுகிறது.
மக்கள் நலன் காக்க மட்டுமே ஒரு அரசு செயல்பட வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக மட்டுமே அரசு செயல்பட முடியாது என்று தெரிவித்துள்ளார். ஆனால், அரசு ஊழியர், ஆசிரியர் இல்லாமல் அமைச்சர்கூட செயல்பட முடியாது என்பதும் அவருக்கு தெரியவில்லை. அதேபோல பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மாணவர் நலன் என்று சொல்லி இந்த போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை மாணவர்களுக்கு எதிராக போராட வேண்டாம் என்று சொல்லியும், தேர்வு பாதிக்கிறது என்று சொல்லி, எங்களை அழைத்துப் பேசுவதற்கு பதிலாக ரூ.7500 சம்பளத்தில் ஆசிரியர்களை அத்தக்கூலியாக அமர்த்துவோம் என்று கூறுகிறார். தற்போது ஆள் கிடைக்காமல் போனதை அடுத்து, தற்போது ரூ.10 ஆயிரத்துக்கு ஆசிரியர்களை நியமிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பளத்துக்கும் ஆசிரியர்கள் வருவார்களா என்பது சந்தேகமே. இன்று மதுரையில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் தான் அமைச்சர் ஜெயக்குமார், எங்கள் கோரிக்கை குறித்து முதல்வர் கவனத்துக்கு எடுத்து செல்கிறோம் என்று சொன்னவர்தான்.
நாங்கள் கேட்பது முன்னாள் முதல்வர் அறிவித்ததைத் தான் கேட்கிறோம். அவர்தான் புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர். அதனால் எங்களை அழைத்துப் பேசி தீர்வு காணாவிட்டால் இந்த போராட்டத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் உடனடியாக அழைத்துப் பேச வேண்டும். பிரச்னையை தீர்ப்பதைவிட்டுவிட்டு இதுபோல பத்திரிகை விளம்பரங்களை வெளியிடவேண்டாம். கடந்த முறை இதுபோன்ற ஒடுக்குமுறையை எதிர்கொண்டு 1 லட்சத்து 76 ஆயிரம் பேர் டிஸ்மிஸ் ஆகித்தான் எங்கள் உரிமையை மீட்டோம். அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். 2003ல் இதுபோல வீடுபுகுந்து கைது செய்யப்பட்டோம். 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்திருக்கிறோம். அதன்பிறகு எஸ்மா, டெஸ்மா அமல்படுத்தப்பட்டு 1 லட்சத்து 76 ஆயிரம் பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டோம். அமைச்சர் ஜெயக்குமார் சொல்வது போல சங்கங்கள் என்ற பெயரில்
நாங்கள் அரசியல் நடத்தவில்லை. நாங்கள் அரசியல் நடத்தினால் தமிழகத்தில் யாரும் ஆட்சி நடத்த முடியாது. எங்களுக்கு வர்க்க அரசியல்தான் தெரியும், கட்சி அரசியல் தெரியாது. புதிய ஆசிரியர்கள் எப்படி தேர்வுக்கு பாடம் நடத்த முடியும். பழைய ஆசிரியர்களால் தான் முடியும். வரி வருவாய் எப்படி வருகிறது என்பது எங்களுக்கு தெரியும். அதனால் எங்களை அழைத்துப் பேச வேண்டும். ஜனநாயக முறையில்தான் மறியல் நடத்துகிறோம். அமைச்சர் ஜெயக்குமார் சொல்வது சரி இல்லை. சம்பளத்துக்கான செலவினம் என்பது 31.63 சதவீதம். ஒரு ஆண்டுக்கு ரூ. 52 ஆயிரத்து 171 கோடி ஓய்வு ஊதியத்துக்கான செலவினம் 25362 கோடி 15.37 சதவீதம், இதை இரண்டையும் சேர்த்தால், 47 சதவீதம் தான் வருகிறது. ஆனால், எங்களது சம்பளத்தில் உயர் அதிகாரிகளின் நிர்வாகச் ெசலவினங்களை 6.57 சதவீதமான 10 ஆயிரத்து 837 கோடியை ேசர்க்கின்றனர். இது எங்கள் சம்பளமா. அது தவிர அரசு வருடம்தோறும் செலுத்தும் வட்டி 17.42 சதவீதம். அதாவது ரூ. 28729 கோடி எங்கள் சம்பளமா. இதை எல்லாம் சேர்த்து ெசால்கிறார்.
அரசு செலுத்தும் வட்டி, நிர்வாக செலவுகளை எங்கள் சம்பளத்தில் காட்டி 71 சதம் என்று கூறுகிறார். எங்களுக்கு சம்பளமாக கொடுப்பது 40 சதவீதம்தான். இதை நாங்கள் நாளை நீதிமன்றத்தில் தெளிவு படுத்த உள்ளோம். தற்போது நிர்வாக ரீதியாக சஸ்பெண்டு செய்துள்ளனர். இது ஒரு பெரிய விஷயம் அல்ல. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எங்கள் உரிமைக்காக போராடுகிறோம். முதல்வர் அழைத்துப் பேசினால் தமிழக மக்களுக்கும், மாணவர்களுக்கும் நல்லது. பேச்சு வார்த்தை மூலம்தான் தீர்க்க முடியும். அப்படி இல்லை என்றால் நாங்கள் அறிவித்தபடி போராட்டம் தொடரும். இதுவரை ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கவில்லை.
இப்போதாவது ஓய்வு ஊதியம் வழங்கத்தயாராக இருந்தால் போராட்டத்தை வாபஸ் பெறத் தயார் என்றார். அமைச்சர் ஜெயக்குமார் சொல்வது போல சங்கங்கள் என்ற பெயரில் நாங்கள் அரசியல் நடத்தவில்லை. நாங்கள் அரசியல் நடத்தினால் தமிழகத்தில் யாரும் ஆட்சி நடத்த முடியாது. எங்களுக்கு வர்க்க அரசியல்தான் தெரியும், கட்சி அரசியல் தெரியாது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews